செய்திகள் :

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..." - டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

post image

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார்.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் டி.ஜே-வாக முக்கியப் பங்காற்றி வருகிறார். இதனைத் தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் மியூசிக் கான்சர்ட்களில் இவர் பங்காற்றியிருக்கிறார்.

நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசுவதற்கேற்ப சரியான டைமிங் பஞ்ச் போடுவது இவருடைய பலம்.

DJ Black
DJ Black

இன்று சின்னத்திரையில் அதிகம் ரசிக்கப்படும் ஒருவராகவும் இவர் மாறியிருக்கிறார். இவருக்குத் திருமணம் நடைபெறவிருப்பதாக, இவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இவர் அறிவித்திருக்கிறார். ரம்யா என்பவருடன் வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது.

திருமணம் குறித்த அறிவிப்புப் பதிவில் அவர், "என்றென்றும் பற்றிக்கொள்ள... எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். இன்னும் 10 நாட்களில்..." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

இவருடைய சின்னத்திரை நண்பர்கள் பலரும், இவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Bigg Boss 10: முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட், நடிகையின் மகள்.! - கலந்து கொள்கிறவர்கள் இவர்களா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் ந... மேலும் பார்க்க

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில்... மேலும் பார்க்க

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க