'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி ...
மதுரை: ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி; உறவினர்கள் போராட்டம்!
மதுரை மாவட்டம், சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர்கள் அந்திஸ்வரன் - ஆனந்த லெட்சுமி தம்பதி. இவர்களது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஆசிரியர் மாணவியை திட்டியதாகக் கூறப்படுகிறது,
இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சமயநல்லூர் போலீஸார் இறந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி இறப்பதற்கு முன்பு தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாரின் விசாரணையில் இறந்த மாணவி பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று, தற்போது 11-ம் வகுப்பில் படிப்பில் பின் தங்கியதால் ஆசிரியர் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அலங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.


















