செய்திகள் :

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

post image

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

பிரேமா இஷ்க் காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பவன் சதினேனி, துல்கர் சல்மான் நடிப்பில் ஆகாசத்தில் ஒக தாரா என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் பவன் சதினேனி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பவன் சதினேனி
பவன் சதினேனி

காவல்துறையில் பெண் அளித்த புகாரில், குடும்பத்தினரால் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவன் சதினேனியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அப்பெண்ணின் தொழில் மற்றும் எதிர்காலத்தைக் கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பவன் சதினேனி அப்பெண்ணைக் கண்டுகொள்ளாமல், பாலியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், நடிகையாக வாய்ப்பு தருவதாகக் கூறி எவ்வித வாய்ப்பும் தரவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பல பெண்களுடன் பவனுக்கு இதேபோல் தொடர்பு இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை பவன் சதினேனியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில்... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hi... மேலும் பார்க்க

Irumudi: "என் சினிமா போராட்டங்கள் 90-களில் சென்னைலதான் தொடங்கியது!" - சென்னையில் ரவி தேஜா

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi -... மேலும் பார்க்க

Nagarjuna: ''மணிரத்னம் படத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு" - சொல்கிறார் நாகர்ஜூனா

நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தது தனது திரையுலகப் பயணத்திலேயே மிகவும் துணிச்சலான முடிவு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தனது மகன்களான நாக சைத... மேலும் பார்க்க

"என் தம்பி எனக்கு போன் செய்வதே இல்லை.!"- பிரம்மானந்தம் குறித்து உருக்கமாகப் பேசிய சகோதரர்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்... மேலும் பார்க்க

"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா

'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர். Anand Devarakondaஅவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி... மேலும் பார்க்க