செய்திகள் :

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர்

post image

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது.

இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீர் வராது என்று தமிழ்நாடு குரல் எழுப்புகிறது.

ஆனால், மேகதாது அணை கட்டினால், அது தமிழ்நாட்டிற்குத்தான் உதவும் என்று ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் நேற்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

“மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கானது அல்ல. அது தமிழ்நாடு மக்கள் நலனுக்கானது. அதில் சேமிக்கப்படும் 95% நீர் தமிழ்நாட்டிற்குத்தான் பயன்படும்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

மேகதாது நீரைக் கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் பாசனத்திற்கு ஒரு சொட்டுக் கூட பயன்படுத்த முடியாது.

காவிரியிலிருந்து பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

முக்கியமான காலங்களில் அளவுக்கு அதிகமாக ஓடும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்பதால், இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு வாழ்வாதாரமானது.

அவர்களுக்கு தண்ணீரைத் திறந்து விடுவதற்காகவே அதை நாம் அங்கு சேமித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நம்மிடம் உள்ளது.

‘இது உங்கள் நிலத்தில் உள்ளது, நீங்களே இதைச் செய்கிறீர்கள்’ என்று உச்ச நீதிமன்றம் மிகக் கனிவோடு அங்கீகரித்துள்ளது.

இயல்பான மழைக்காலங்களில் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுவது நமது கடமை, அதற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டிருக்கிறதோ, அந்த உறுதியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன்.

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில், நான் இந்த அணை தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கவும் மட்டுமே அமைக்கப்படுகிறது என்று தெளிவாக பேசினேன்.

அணை இல்லாவிட்டாலும் கூட எங்களால் நீரெடுக்க முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஏனெனில் அதற்கு நமக்கு உரிமை உண்டு. ஆனால் அருகில் வேறு பொருத்தமான இடம் எதுவும் இல்லை. அந்த வகையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.”

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ - பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த ... மேலும் பார்க்க

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத... மேலும் பார்க்க

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது. கோவி.செழியன்திமுக முன்... மேலும் பார்க்க

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்... மேலும் பார்க்க

`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போத... மேலும் பார்க்க