செய்திகள் :

நெல்லை: வெறிச்சோடிய உழவர் சந்தை... இரவில் மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!

post image

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெறிச்சோடி கிடக்கிறது. நேரில் பார்வையிட்டபோது, அப்பகுதியினர் பகிர்ந்த தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

அப்பகுதியினர் கூறுகையில், ``பல ஆண்டுகளாக உழவர் சந்தையில் வியாபாரம் நடைபெறாததால், விவசாயிகளும் வியாபாரிகளும் வாரச்சந்தைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு மாறிவிட்டனர். சந்தைக்காக கட்டப்பட்ட கடைகளும் தற்போது பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கின்றன. மீண்டும் இங்கு வியாபாரம் தொடங்குவதற்கு விவசாயிகளிடமும் ஆர்வம் குறைந்துள்ளதாக" அவர்கள் தெரிவித்தனர்.

இந்த உழவர் சந்தையைச் சுற்றி புறநகர் மருத்துவமனை, பூங்கா, அங்கன்வாடி பள்ளி, முதியோர் இல்லம் போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியமான இடங்களுக்கு நடுவில் இருந்தாலும், இரவு நேரங்களில் மது அருந்துவோர் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, வளாகத்தை அசுத்தப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மேலும், மின்வயர்கள், டியூப் லைட்கள், சுவிட்ச் போர்டுகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டுள்ளதோடு, போதிய தெருவிளக்குகளும், சிசிடிவி கண்காணிப்பும் இல்லாததால் இந்த இடம் பாதுகாப்பற்ற பகுதியாக மாறியுள்ளதாகவும் அச்சத்துடன் தெரிவித்தனர்.

போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் சென்ற பிறகே இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போதிய தெருவிளக்குகள், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த இடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உழவர் சந்தையை வாரச்சந்தையாக மாற்றினால் பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என்றும், அல்லது வாகன நிறுத்துமிடமாக (பார்க்கிங்) மாற்றினாலும் இந்த இடம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

எந்தத் திட்டமாக இருந்தாலும், தற்போது பயன்பாடின்றி கிடக்கும் இந்த வளாகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அம... மேலும் பார்க்க

கொத்தடிமைக் கொடூரம்: ``கர்ப்பிணி மரணம்; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இ... மேலும் பார்க்க

TVK: "மதுராந்தகத்தில் திமுக வென்றால் தவெக ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்" - ஆர்.எஸ்.பாரதி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?

இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந... மேலும் பார்க்க

BRICS 2026 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு

பொருளாதார வலிமை கொண்ட உலகின் முக்கிய வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து, வர்த்தகம், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச உச்சிமாநாடு BRICS. 2026-ம் ஆண்டுக்... மேலும் பார்க்க