செய்திகள் :

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா

post image

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளூமைகளாக வலம் வந்தனர்.

பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர் போன்றவற்றுடன் நில்லாமல் சினிமாவிலும் ரஜினி நடித்த சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பட்டிமன்றத்தை நோக்கி பாமர மக்களையும் திரும்ப வைத்த‌ பெருமைக்குச் சொந்தக்காரரான பாப்பையா பத்மஸ்ரீ, விகடன் பெருந்தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

Solomon Pappaiah
Solomon Pappaiah

சன் டிவி தொடங்கியது முதல் அதில் தீபாவளி, பொங்கல் என்றால் இவரது பட்டிமன்றம்தான். ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோரைக் கொண்ட இவரது பட்டிமன்ற அணிக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.

சன் டிவி வரலாற்றிலேயே கடந்தாண்டுதான் இவரது தலைமையில்லாமல் பட்டிமன்றம் ஒளிபரப்பானது. அப்போதே வயோதிக பிரச்னை காரணமாக பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில் இன்று முற்பகல் உடல்நலன் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடக்கவிருக்கிறது.

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

பாப்பையாவின் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சாலமன் பாப்பையா: ' தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு' - பிரபலங்கள் இரங்கல்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிக... மேலும் பார்க்க

சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் - இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'I Miss You' யுகத்தில் கட்டுரை வாசிப்பின் அவசியம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

காலம் கடந்தும் வாழும் ஆசியர் - மாணவர் உறவு! - நாகமலை ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு