மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா - சீரமைக்கக் கோரும் பொது மக்...
சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"குரு ப்ரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வரா" என்று ஆசிரியரின் நிலையை கடவுளின் நிலைக்கு உயர்த்தியுள்ளது நம் சாஸ்திரங்கள். மாணவரின் வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் நிற்பவர் ஆசிரியர். எனவே, ஆசிரியர்களின் உழைப்பையும் தியாகத்தையும் மதித்து, அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது ஒவ்வொருவரின் கடமை.
ஒரு நல்ல ஆசிரியர் உருவாக்கும் மாணவர், நாளை நல்ல குடிமகனாக வளருவார். அவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ, கலைஞராகவோ, தலைவராகவோ உயர்ந்தாலும், அதன் அடிப்படை ஆசிரியரின் உழைப்பில் தான் இருக்கிறது. எனவே, சமூக முன்னேற்றத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களின் பங்கு மறுக்க முடியாதது. ஆசிரியர் ஒரு உயர்ந்த நிலையிலிருக்கும் தன் மாணவனைப் பார்த்து “இவன் என் மாணவன்” என்று மிகுந்த பெருமிதம் கொள்வார்.

ஆசிரியர்களின் வாழ்க்கை எளிதானதல்ல. காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படிப்பு முன்னேற்றம், ஒழுக்கம், மனநிலை, சமூகப் பொறுப்பு என பல்வேறு துறைகளிலும் வழிகாட்டியாக செயல்படுகிறார்கள்., ஆசிரியர் தன்னுடைய அறிவை மறைக்காமல் பகிர்ந்து, மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்..
ஆசிரியர்கள் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதில்லை. பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுகவாழ்வைத் துறந்து, மாணவர்களுக்காக உழைக்கிறார்கள். சில சமயங்களில் மாணவர்களின் தேவைக்காக தங்கள் பணத்தைச் செலவிடுகிறார்கள். கூடுதல் நேரங்களில் வகுப்புகள் எடுத்து, விடுமுறைகளிலும் மாணவர்களை வழிநடத்துகிறார்கள். இது அவர்களின் தியாக உணர்வுக்குச் சான்று.
சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளம்
தியாகம் என்றவுடன் லலிதா டீச்சர் தான் என் நினைவுக்கு வருகிறார். தன் வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தவர். இருப்பினும் மனம் தளராமல் பிரச்சனைகளை சமாளித்து தன்னம்பிக்கையுடனும் தன் விடா முயற்ச்சியாலும் முன்னுக்கு வந்தவர். பிறர் மனம் நோகாமல் பேசுவது, நேர் மறை எண்ணங்கள், நேர்மையான நடத்தை என ரோல் மாடலாக விளங்குபவர். ஆசிரியராக பணி புரிந்த போது மாணவர்களை தன் குழந்தைகள் போல் பாவித்து அனைவரையும் பெரிதும் ஊக்குவித்து அவர்கள் பெரிய பதவிகளை வகிப்பதைப் பார்த்து பெருமை அடைவார்.
ஏழை மாணவர்கள் படிப்பக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.. படிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பல மாணவர்கள் முன்னேற வழி .காட்டியுள்ளார். அவர் கணவர் உடல் நிலை சரியில்லாதபோது அவரை முழுமையாக கவனித்துக் கொண்டு மேலும் தனக்கு அறுவை சிகிச்சைகள் என பல பிரச்சனைகள எதிர் கொண்டாலும் மனத் திடத்துடன் எதற்கும் கலங்காமல் தனியாக சமாளித்து இந்த முதுமையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் லலிதா டீச்சர் நான் வியக்கும் பெண்மணி. அவரைச் சுற்றியுல்லோர்க்கும் அவர்தான் பிரியமான டீச்சர்.

சமூக முன்னேற்றத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. சந்திரகுப்த மௌரியனை அரசராக மாற்றியது சந்திரகுப்தனின் ஆசான் சாணக்கியர். அதேபோல் பல சான்றோர்கள், தங்கள் மாணவர்களை உச்சிக்குக் கொண்டு செல்ல தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளனர்
ஆசிரியர்களின் தியாகத்தால்தான் உலகம் அறிவின் பாதையில் முன்னேறுகிறது. அவர்கள் இல்லையெனில் கல்வி என்ற ஒளி அணைந்து போகும். அதனால், "ஆசிரியர்" எனும் அந்த உயர்ந்த நிலையை நாம் அனைவரும் மதித்து, அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நன்றியையும் கௌரவத்தையும் செலுத்த வேண்டும்.
-வி.ரத்தினா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ




















