செய்திகள் :

மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

post image

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் உடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றிட கோரியும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரியும் `தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைதுசெய்ய கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்துப் பேசிய தமிழ்செல்வனின் வழக்கறிஞர், “தமிழ்செல்வன் மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும். பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் மாணவி ஒருவரின் தந்தை மீது சந்தேகம் உள்ளது. ஆனால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த மறுத்து வருகின்றனர்.

தமிழ்செல்வன்

ஆணவப் படுகொலை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவனை மிரட்டிய மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் மாணவனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்றார்.

யோகலட்சுமி

மாணவனின் தாயார் யோகலட்சுமி பேசும்போது, “ எனது மகனுடன் சென்ற நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனது மகனை மிரட்டிய மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்து எந்த விசாரணை நடத்தப்படவில்லை. எனவே எனது மகன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்

வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்றவழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயு... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ரீல்ஸ் செய்த மகள்; மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தந்தை; குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக்(22) என்ற பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. அப்பெண... மேலும் பார்க்க

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். ப... மேலும் பார்க்க

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க