செய்திகள் :

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" - பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

post image

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 துப்பாக்கியுடன் மூவர் நடமாடுவதாகத் தெரிய வந்தது. அவர்கள் மூவரும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையைக் காண்பித்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைந்தனர்.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து இரண்டு பேரைப் பிடித்தனர்.

ஒருவர் அங்கிருந்து எப்படியே நழுவிவிட்டார். இரண்டு பேரில் ஒருவரிடம் பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி அடையாள அட்டை இருந்தது. அவருக்குப் பாதுகாப்பாக வந்தவரிடம் துப்பாக்கி இருந்தது. அந்தத் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருந்தது. அவர்கள் தாங்கள் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்புடையவர்கள் என்று இருவரும் தெரிவித்தனர்.

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிக்கொண்டவர் பெயர் ரோஹன் பாரிக் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவரிடம் இருந்த அடையாள அட்டை போலியானது எனக் கண்டுபிடித்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட ரோஹன் பாரிக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், பிரதமரின் அலுவலக அடையாள அட்டை உண்மையானது என்றும், பிரதமரின் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவரால் ரகசிய ஆராய்ச்சிப் பணிக்காக விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த அதிகாரியின் அடையாளத்தை இப்போதைய நிலையில் வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

வாசனை திரவியம் வாங்க சென்றார்களா

அதோடு பாரிக்கின் வழக்கறிஞர்களான ஆனந்தினி பெர்னாண்டஸ் மற்றும் நமிதா மனேஷிண்டே ஆகியோர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், தங்கள் கட்சிக்காரர் வாசனைத் திரவியம் ஒன்றை வாங்குவதற்காகவே தனிப்பட்ட முறையில் அந்த வணிக வளாகத்திற்குச் சென்றிருந்ததாகவும், பிரதமரின் வருகைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினர்.

ஆனால், பிரதமரின் அலுவலக அடையாள அட்டை போலியானது என்று வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிராந்தி கும்பார், அந்த அட்டை எவ்வாறு பெறப்பட்டது மற்றும் அதற்கான நோக்கம் என்ன என்பதை அறிய கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறி, பாரிக்கின் கோரிக்கையை எதிர்த்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் வரும் 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. அவருடன் வந்த மற்ற இருவர் பெயர் குந்தே மற்றும் பாகுல் எனத் தெரிய வந்தது.

மேற்கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில், பாரிக்கின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளராக ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதாகவும், அதற்காக மாதம் 1.2 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று வருவதாகவும் குந்தே கூறியுள்ளார்.

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் - களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கா... மேலும் பார்க்க

வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் ... மேலும் பார்க்க

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை ... மேலும் பார்க்க

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க