செய்திகள் :

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

post image

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை மாற்றிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

67 வயதான ஆர்தர் லெய்ன் லண்டீன் என்ற பயணி, விமானப் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின்படி, லண்டீன் விமானத்தில் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவரைத் தாக்கியதாகவும், அவரது கழுத்தைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

அவரைத் தடுக்க முயன்ற பெண் பயணி ஒருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் விமானத்தில் பயணித்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த உதவினர்.

பயணி ஒருவர் கூறுகையில் விமானத்தில் நிலவிய அமைதியான சூழல் திடீரென கூச்சல் மற்றும் குழப்பமாக மாறியது. விமானப் பணியாளர் ஒருவர் முதலில் லண்டீனைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், அவர் மேலும் ஆக்ரோஷமடைந்ததார்.

நிலைமை கட்டுக்குள் வந்த பின், விமானப் பணியாளர்கள் வழங்கிய டைகள் மற்றும் நெகிழ்வான பொருட்கள் கொண்டு அவரைக் கட்டி வைத்தனர். பின்னர் லண்டீன் முதல் வகுப்பு இருக்கையில் அமர வைக்கப்பட்டு, டேப்பைப் பயன்படுத்தி அவரது தலை மற்றும் உடல் பகுதி இருக்கையுடன் கட்டி வைத்தனர்.

லெய்ன் லண்டீன்
லெய்ன் லண்டீன்

நிலைமையைத் தொடர்ந்து, விமானம் பால்டிமோர் நகருக்குத் திருப்பிவிடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் லண்டீன் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் மற்ற பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்

விமானப் பயணத்தில் வன்முறை மற்றும் கட்டுப்பாடற்ற நடத்தைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

சம்பவத்துக்குப் பின்னர் வேலை இழப்பு

லண்டீன் அரிசோனாவின் டக்சன் நகரைச் சேர்ந்த Long Realty நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் முகவராகவும் முன்னாள் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்தவுடன், அவருடனான நிறுவனத் தொடர்பை உடனடியாக முடித்துக்கொண்டதாக Long Realty தெரிவித்துள்ளது.

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க

5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செ... மேலும் பார்க்க

பன்றியின் சிறுநீரகத்தில் உயிர் வாழ்ந்த நபர்; 271 நாள்களுக்குப் பிறகு கிடைத்த மனித சிறுநீரகம்!

உலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் அல்லது. கிடைக்காமல் போவது போன்ற காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இ... மேலும் பார்க்க