செய்திகள் :

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" - உதயநிதி விமர்சனம்

post image

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.

சட்டமன்றத்தில் பேசிய விஜய், "ஐ.ஏ.எஸ் ஆபிசர்கள் பெயரும் டாஸ்மாக் விவகாரத்தில் அடிபடுகிறது. ரத்தீஸ் என்பவரின் பெயரும் அதில் அடிபடுகிறது. ரத்தீஸின் சொல்படிதான் ஐ.ஏ.எஸ் அதிகாரி செயல்பட்டார் என அமலாக்கத்துறை கூறுகிறது.

 முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவரை பவர் ப்ரோக்கர் என்கிறார்கள். நம் அரசு வந்தவுடன் ரத்தீஸ் ஏன் துபாயில் போய் ஒளிந்திருக்கிறார்? பார் ஓனர்களிடமிருந்து பார்ட்டி பண்ட் வாங்கியிருக்கின்றனர். அவர்களை கரூர் கேங் என அமலாக்கத்துறை கூறுகிறது. Malpractice, Fraud, Abusing Power, Karur Gang, Corrupt... இந்த வார்த்தைகளைத்தான் திமுகவை பற்றி அமலாக்கத்துறை குறிப்பிடுகிறது. திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும். தப்பு நடக்குற இடத்துலதான் திமுக இருக்கும்.

கடந்த வாரம் பேசும் போது என் டேபிளில் 3 பைல் இருக்கிறது என்றேன். அதை ஓப்பன் பண்ணுவதற்கு முன் ஒரு சாம்பிள் பார்ப்போம். கடந்த திமுக அரசில் அமலாக்கத்துறை அனுப்பிய கோப்பு இங்கே.

சர்காரிய கமிஷனில் இருப்பதை பார்ப்போம். வீராணம் திட்டத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் ஒப்பந்தம் எடுக்க மாறன் இரண்டரை சதவீத கமிஷன் கேட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. அந்த அறிக்கை வந்து பொன் விழாவே வந்துவிட்டது.

1970-74 வரை தவணை முறையில் 29 லட்சம் கமிஷன் வாங்கப்பட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. கலைஞர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இதெல்லாம் நான் சொல்லும் குற்றம் இல்லை. அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டு" என்று திமுகவை கடுமையாகப் பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!" என்று விமர்சித்திருக்கிறார்.

``கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" - உதயநிதி காட்டம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் ... மேலும் பார்க்க

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்ப... மேலும் பார்க்க

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி

ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர... மேலும் பார்க்க

சென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை.!" - நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.நயினார் நாகேந்திரன் தனது ... மேலும் பார்க்க

50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' - பின்னணி என்ன?

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து க... மேலும் பார்க்க