செய்திகள் :

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

post image

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்த அவர், "50 படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கிறோம். நான் மரியாதையுடனும் அன்போடும் 'இச்சக்கா' என்று அழைக்கும் மனிதருக்கு எனது இதயப்பூர்வமான 75-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா வரலாற்றிலேயே இரண்டு முன்னணி நடிகர்கள் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு.

Mohanlal
Mohanlal

திக்கா குரிசி, கொட்டாரக்கரா, சத்யன், நசீர் போன்ற மாபெரும் முன்னோடிகள் விட்டுச்சென்ற கலைப் பாரம்பர்யத்தை நாங்கள் இருவரும் இணைந்து முன்னெடுத்துச் சென்றோம்.

நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் சரி, தனித்தனிப் படங்களில் நடித்திருந்தாலும் சரி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு எப்போதும் முழுமையான உழைப்பைக் கொடுக்கவே முயன்றிருக்கிறோம்.

எங்களுக்குள் ஒருபோதும் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை. மாறாக சினிமா மீது இருவருக்குமே எல்லையற்ற காதல் இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், என்னை விடவும் சினிமா மீது அதிக பற்றும் காதலும் கொண்டவர் என் இச்சக்காதான்.

அந்த ஆர்வத்தை ஒரு துளி கூடக் குறையாமல் இன்றுவரை அவர் பாதுகாத்து வருகிறார். சில காலத்திற்கு முன்பு இச்சக்காவின் வாழ்க்கையில் ஒரு சவாலான கட்டம் கடந்து சென்றது.

அந்தக் கடினமான நேரத்திலும், நல்ல சினிமாக்களைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் எனக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

Mammootty - Mohanlal
Mammootty - Mohanlal

'இதுவும் கடந்து போகும்' என்று நாங்கள் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக்கொண்டோம். கடவுளின் அருளால் அதுவே நடந்தது. அவர் என்றும் எனக்குப் பின்னால் பலமாக இருக்கிறார் என்ற உணர்வே எனக்குத் தனி தைரியத்தைத் தருகிறது.

என் இதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கும் ஒரு நல்ல நண்பராக, ஆச்சரியப்படுத்தும் சிறந்த நடிகராக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில் தோள் கொடுக்கும் மூத்த சகோதரராக அவர் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந... மேலும் பார்க்க

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெ... மேலும் பார்க்க