செய்திகள் :

"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

post image

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமானக் கோரிக்கைகளை வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஆனால் இன்று முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதை நான் அவையில் சுட்டிக்காட்டினேன். இன்று மாலை சட்டசபை முடிவதற்குள் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அதாவது பதவி உயர்வு, சம்பள உயர்வு, காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு நிரந்தர பதவி உயர்வு வழங்க வேண்டும். சைபர் க்ரைம் மிக மோசமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பல்வேறு பதிவுகள் ஊடுருவி வருகின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு சைபர் க்ரைமை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.

அதேபோல காவல் மரணத்தில் இறந்த சபரிவர்மன், அருணாசலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதி, வேலைவாய்ப்பை வழங்குவார்கள் என்று பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். அதனை நான் வரவேற்கிறேன். தவெகவினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநி... மேலும் பார்க்க

லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை ... மேலும் பார்க்க

KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" - லஞ்ச ஒழிப்புத் துறை

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் ... மேலும் பார்க்க

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" - உதயநிதி விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய... மேலும் பார்க்க

``கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" - உதயநிதி காட்டம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் ... மேலும் பார்க்க

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம்

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்ப... மேலும் பார்க்க