செய்திகள் :

மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை

post image

மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். 

தந்தை வெளியூரில் உள்ளதால் தாயார் யோகலட்சுமி, தமிழ்செல்வன் அவரது சகோதரி ஆகிய மூன்று பேரும் தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாகத் தனது தாயாரிடம் கூறிவிட்டு மாணவன் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து மாலை வரை வீடு திரும்பாத நிலையில் சிறுவனை அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே அப்துல் கலாம் தெரு பகுதியில் உள்ள முட்புதர் அருகே காயங்களுடன் சடலமாக தமிழ்செல்வன் மீட்கப்பட்டார்.

முதற்கட்ட தகவலில் பள்ளி மாணவன் தமிழ்செல்வன் தனது வீட்டருகே உள்ள வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பு ரீதியாகப் பேசிவந்துள்ளார். 

கூடல்புதூர் காவல்நிலையம்
கூடல்புதூர் காவல்நிலையம்

இது தொடர்பாக மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனை மாணவியிடம் பேசக்கூடாது எனக் கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மாணவனிடம் உன் வீடு எங்கு உள்ளது என மாணவியின் தந்தை கேட்டபோது பட்டியலினச் சமூகத்தினர் இருக்கும் பகுதி ஒன்றைச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முட்புதரில் மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆட்கள் நடமாட்டமே இல்லாத முட்புதருக்குள் மாணவன் நீரில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தச் சம்பவம் குறித்து ஆணவப்படுகொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3... மேலும் பார்க்க

சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ. கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போத... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, ... மேலும் பார்க்க

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க