செய்திகள் :

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

post image

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த  காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளில், சாலை ஓரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருக்கும் நிலையில், சாலையில் நடந்து வந்த நபர், குரைத்து கொண்டு இருந்த நாயை பற்றி அவரிடம் கேட்கின்றார்.

பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்
பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்

பின்னர், நாயை விரட்டி விடும் அந்நபர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாலை ஒரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து உள்ளார். அப்போது தெருநாய்கள் விடாமல் குரைத்தபடி இருந்தும், அந்நபர் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்கிறார்.

மனநிலை பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட நிலையில், அப்பெண்ணிற்காக தெரு நாய்  அந்நபரைப் பார்த்து குரைத்து விரட்டுவதற்குப் போராடுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. ​நாய்களின் தொடர் தாக்குதலால் பாலியல் வன்கொடுமை செய்ய முடியாமல் அந்நபர், பெண்ணை விட்டுவிட்டு  ஓடும் காட்சிகளும், தெரு நாய் அவரை விரட்டி செல்வதும் சிசிடிவி காட்சிகளில் உள்ளது.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்தவர் துடியலூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுவனைக் கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, ... மேலும் பார்க்க

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க

நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது வீட... மேலும் பார்க்க