செய்திகள் :

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" - செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

post image

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், '"'தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?' என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்.

தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..

சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..

அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..

சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ

எந்தச் சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்தச் சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் - ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)" என்று பதிவிட்டிருக்கிறார்.

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை திமுக: "உன் மகனின் துரோகச் செயல்"- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் ( செப்டம்பர்- 5) நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேடையேறி மைக்கைப் பிடுங்கிப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே கார... மேலும் பார்க்க

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட... மேலும் பார்க்க

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" - கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வ... மேலும் பார்க்க

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்... மேலும் பார்க்க