செய்திகள் :

சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன?

post image

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ.

கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழிமறித்த ஒரு கும்பல் ஒன்று கணவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றதாக உறவினர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் சுஜிதாஸ்ரீ.

பூபதியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சுஜிதாஸ்ரீயின் நடவடிக்கைகளால் சந்தேகம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அவரிடமே விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எதிர்வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததைக் கண்டறிந்து கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்தோம் எனத் திடுக்கிட வைத்திருக்கிறார்.

சுஜிதாஸ்ரீ, சந்தோஷ் ராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்தத் தம்பதியின் 13 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அனுப்பி வைத்துள்ளனர். சந்தோஷ் ராஜ் மட்டுமின்றி பூபதியின் நண்பர்கள் பலருடனும் திருமணம் தாண்டிய உறவில் சுஜிதா இருந்து வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கைதான சுஜிதாஸ்ரீ
கைதான சுஜிதாஸ்ரீ

இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த ஓமலூர் காவல்துறையினர், "செங்கல் சூளை உரிமையாளரான பூபதியின் வீட்டிற்கு தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுடன் ரகசியமாகப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுஜிதாஸ்ரீ, திருமணம் மீறிய தகாத உறவில் இருந்து வந்திருக்கிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூபதி அடிக்கடி கண்டித்து வந்திருக்கிறார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் பல ஆண்களுடன் ரகசிய உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார். எதிர் வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடனும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து விவகாரம் தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

பூபதியின் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்ததுடன், சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்து கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். தன்னுடைய 13 வயது மகனையும் இந்தக் கொடூர கொலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். கொலையை மறக்கவே சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடியிருக்கிறார்" என்றனர்.

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்!

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" - மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, ... மேலும் பார்க்க

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' - லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை திருப்பதிதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்... மேலும் பார்க்க

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்த... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்க... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள்; சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார். அந்... மேலும் பார்க்க