செய்திகள் :

Doctor Vikatan: இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருவது ஏன்?

post image

Doctor Vikatan: இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது சிரப்புகள் (சப்ளிமென்ட்ஸ்) எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்னை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழியே கிடையாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர் சார்லஸ் மனோ சைலஸ்.

பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர் சார்லஸ் மனோ சைலஸ்
பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர் சார்லஸ் மனோ சைலஸ்

இரும்புச்சத்து மாத்திரைகள் (Iron supplements) பொதுவாக மலச்சிக்கலை (Constipation) உண்டாக்கும். ஏனெனில், வாய்வழியாக உட்கொள்ளப்படும் பெரும்பாலான இரும்புச்சத்து உடலால் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை.

உறிஞ்சப்படாத இரும்புச்சத்து, குடலின் உட்புறச் சுவரில் (Intestinal lining) எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை (Gut microbiome) மாற்றி, குடல் இயக்கத்தை (Bowel movements) மந்தமாக்குகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது.

இரும்புச்சத்து மாத்திரைகள் எடுக்கும்போது ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்கவும், ரத்தச் சோகையைச் சிறப்பாகக் குணப்படுத்தவும் சில பயனுள்ள வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத் தானியங்கள் மற்றும் பயறு வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் இயக்கத்தைச் சீராக்க உதவும். மிதமான நடைப்பயிற்சி மற்றும் தினசரி உடற்பயிற்சிகள் செரிமான மண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், இரும்புச்சத்தின் அளவை (Dosage) மாற்றுவது அல்லது திரவ வடிவிலான (Syrup) இரும்புச்சத்து மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் இயக்கத்தைச் சீராக்க உதவும்.

இரும்புச் சத்து சிறப்பாக உறிஞ்சப்படவும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் மாத்திரையை எடுக்கும்போது இரும்புச்சத்து உடலில் விரைவாக உறிஞ்சப்படும்.

மாத்திரை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் குறைந்தது 1 முதல் 2 மணி நேரத்திற்கு டீ, காபி, பால் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.

இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது மலம் கறுப்பு நிறமாக வெளியேறுவது இயல்பான ஒன்றுதான். அதற்குப் பயப்படத் தேவையில்லை.  

டாக்டர் சார்லஸ் மனோ சைலஸ்:

சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 12 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா... இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் ... மேலும் பார்க்க

நீரிழிவு நோய் முதல் பாதப் பராமரிப்பு வரை: ‘பாதமே நலமா? Season 3’ மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் கவனித்தால் போதுமா?, பாதங்களில் ஏற்படும் சிறிய காயங்களைக்கூட ஏன் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது? இவை போன்ற முக்கியமான மற்றும் அவசியமான கேள்விகள... மேலும் பார்க்க

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தல... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி... மேலும் பார்க்க

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்புஉள்ளவர்கள் வெறும் வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கரும்புள்ளி... முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை; இந்த 6 விஷயங்களில் அலெர்ட்!

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களாக கன்னங்களிலும், நெற்றியிலும் கரும்புள்ளிகளும், கரும்படலமும் ஆரம்பித்திருக்கிறது. இது என் தன்னம்பிக்கையையே சிதைப்பது போல இருக்கிறது. மருத்துவரிம் ... மேலும் பார்க்க