செய்திகள் :

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

post image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது.

ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசை ஆட்டம் காண வைத்தது. அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50,000 என உடனடி நிவாரணத் தொகையை அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்

அத்துடன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதையடுத்து அந்த ஆணையம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் விசாரணை செய்தது.

இதற்கிடையில் மாநில சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவால் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இப்போது சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்றைய சட்டப்பேரவையில் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையம்.

அந்த அறிக்கையில், `மதுவிலக்கு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அலட்சியமும், கடமை தவறிய போக்கும் இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை விவகாரத்தில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது.

மெத்தனால் போன்று மேலும் சில திரவங்களை சாராயத்தில் கலந்து அருந்தியதுதான் உயிரிழப்புகளுக்கு காரணம். பாதிப்பு சம்பவம் தெரிந்தவுடன் கள்ளச்சாராயம் புழங்கும் பகுதிகளில் அதிகாரிகளால் எச்சரிக்கை வழங்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

உடனடியாக கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் குறைந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யாததுதான் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்' என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், 2023 முதல் 2024 வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றிய துறை சார்ந்த அதிகாரிகள் மீது விசாரணை தொடங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது. ஆணையத்தின் இந்தப் பரிந்துரையால் கலக்கத்தில் இருக்கின்றனர் துறைசார்ந்த அதிகாரிகள்.

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க