செய்திகள் :

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

post image

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து பணிகளை அதிமுக துவங்கிவிட்டது. போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் களமே மாறியிருக்கிறது.

இந்நிலையில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பிரதான கட்சிகளான  தவெக, திமுக, அதிமுக ஆகியவை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன? என்ற கேள்வியுடன் பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

பட்டியல் சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவம்.!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் தனித்தொகுதிகளாக இருப்பது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே பட்டியல் சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை முக்கிய பிரசாரமாக அந்தக் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தவெகவிற்கு கூடுதல் பலம்

முந்தைய திமுக ஆட்சியில் 4 பட்டியல் சமூக அமைச்சர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போதைய தவெக அரசில் 6 அமைச்சர்கள், கூட்டணியில் விசிக 1 மற்றும் காங்கிரஸ் 1 என மொத்தம் 8 அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டு, பட்டியல் சமூக மக்களிடையே தவெக- விற்கான செல்வாக்கை அதிகரித்துள்ளது. மேலும், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இவர்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

அனுபவத்தை விட அரசியல் விவாதங்களே தேர்தலில் எதிரொலிக்கும்

தவெக வழக்கம் போல 'திமுகவிற்கும் எங்களுக்கும்தான் நேரடிப் போட்டி' என்ற பிம்பத்தை உருவாக்க முயன்றாலும், ஆட்சியின் இந்த 116 முதல் 120 நாள்கள் என்பது அவர்களுக்குப் பெரிய சாதனையாக மாறிவிடவில்லை. 'தாய்மாமன் தங்க மோதிரம்', 'அண்ணன் சீர் திட்டம்', '3 இலவச காஸ் சிலிண்டர்கள்' போன்ற திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. ஜனவரி அல்லது பொங்கல் சமயத்தில்தான் இவை நடைமுறைக்கு வரவுள்ளதால், மக்கள் இன்னும் இதன் நேரடிப் பயனாளிகளாக மாறவில்லை. இதனால், பயனாளிகளின் அனுபவத்தை விட அரசியல் விவாதங்களே தேர்தலில் எதிரொலிக்கும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீதி கேட்கும் போராட்டமாக அதிமுக..!

அதிமுக இந்த இடைத்தேர்தலை ஒரு 'நீதி கேட்கும் போராட்டமாக' அணுகுகிறது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய குதிரை பேர விவகாரம் மற்றும் தங்களின் எம்.எல்.ஏ-க்கள் பறிக்கப்பட்ட சம்பவம் ஆகியவற்றைக் கூறி, மக்களிடம் அனுதாபத்தைச் சம்பாதிக்க அதிமுக முயல்கிறது. இதனாலேயே விருப்ப மனுக்களை அறிவிப்பதில் அதிமுக முதன்மையாகச் செயல்பட்டுள்ளது. அதேவேளையில், தவெக தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் அதிமுக-வை விமர்சிக்க மாட்டார். ஏனெனில் அதிமுக-வின் வாக்கு வங்கியைக் கரைத்துத் தம் பக்கம் இழுப்பதே அவர்களின் திட்டமாக உள்ளது.

ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி திமுக..!

திமுக-வைப் பொறுத்தவரை, தவெக  அரசின் நிர்வாகத் திறனின்மை, சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் மற்றும் 120 நாள்கள் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. களம் மும்முனைப் போட்டியாக இருக்கும் வரை, ஆளுங்கட்சியான தவெக-விற்கு 35% வாக்கு வங்கியும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் சாதகமாக இருக்கும்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

ஆனால், இது அதிமுக-வின் தொகுதி என்பதால் திமுக களத்தில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டால் மட்டுமே தவெக-விற்குச் சிக்கல் ஏற்படும். இறுதியாக, அதிமுக 'நீதி கேட்கும் குரலாகவும்', திமுக 'நிர்வாகக் குறைபாடுகளை எதிர்க்கும் குரலாகவும்', த.வெ.க. 'பட்டியல் சமூக பிரதிநிதித்துவத்தை உயர்த்தும் குரலாகவும்' பிரசாரத்தைக் கொண்டு செல்லும்” என்று நிலவரத்தை விளக்கினார், பத்திரிகையாளர் சுவாமிநாதன்.

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க