செய்திகள் :

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

post image

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முக்கியமான மருத்துவ ஆதாரமாக விளங்குகிறது.

இத்தகைய சூழலில், மருத்துவமனை வளாகத்தில் வசதி குறைபாடு, சுகாதார சீர்கேடு, பராமரிப்பின்மை ஆகியவை சிகிச்சைக்காக வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலை:-

மருத்துவமனை வளாகத்துக்குள் நுழையும்போதே சாலையின் நிலை கவனத்தை ஈர்க்கிறது. சில பகுதிகளில் சாலை சேதமடைந்து பள்ளங்களுடன் காணப்படுகிறது. மழைக்காலங்களில் அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்கும் நிலையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வளாகத்துக்குள் சாலை இவ்வாறு சேதமடைந்திருப்பது, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது.

முறையாகப் பராமரிக்கப்படாத குடிநீர் குழாய்கள்:-

மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சில குடிநீர் குழாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. சில குழாய்களில் பாசி படிந்தும், துருப்பிடித்தும் இருந்தன.

குடிநீர் அருந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சில குவளைகளும் போதிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படாத நிலையில் இருந்தன.

மேலும், சில குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் குடிநீர் வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வளாகத்தில் அதிகரிக்கும் தெருநாய்களின் நடமாட்டம்:-

மருத்துவமனை வளாகத்துக்குள் தெருநாய்களின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வருபவர்களில் சிலர் நாய்களுக்கு உணவு வழங்குவதால், அவை வளாகத்திலேயே தொடர்ந்து சுற்றித் திரிவதாக அங்கு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைப் பிரிவு கட்டடங்களின் அருகிலும் நாய்கள் நடமாடுவதைக் காண முடிகிறது. சில நேரங்களில் நாய்கள் துரத்துவதாகவும் அங்கு வருபவர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா?

மருத்துவமனையின் சில பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் கீழே கிடப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடங்களுக்குப் பின்புறம் மருத்துவக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, சில நோயாளிகள் ஜன்னல் வழியாகக் கழிவுகளை வெளியே வீசிவிடுவதாகத் தெரிவித்தனர்.

மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதியை ஒட்டியுள்ள காலியிடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இதனால், மருத்துவக் கழிவுகள் அனைத்தும் விதிமுறைகளின்படி முறையாக அகற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

தீர்வு காணப்படுமா?

தினமும் 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவது அவசியம்!

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க