செய்திகள் :

"நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" - உதயநிதி காட்டம்

post image

“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.
பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை.

ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?

குளறுபடிகளும், மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

"மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்" - பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு ED கடிதம்

கேரள மாநிலம் ​கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜ... மேலும் பார்க்க

உதயநிதியின் பாராட்டு; கிருஷ்ணசாமியின் விமர்சனம்; கடந்து செல்லச் சொல்லும் திருமாவளவன்

வி.சி.க தலைவர் திருமாவளவனையும், அமைச்சர் வன்னி அரசுவையும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்ததுடன் "இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று, வன்னி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம... மேலும் பார்க்க

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" - ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான ந... மேலும் பார்க்க

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' - தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 'எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார். எ... மேலும் பார்க்க

'இளைய தளபதி க்ரூப்ஸ்' - ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? - அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் 'நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை...' தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார்.அமைச்... மேலும் பார்க்க