செய்திகள் :

தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் - சரித் திடீர் திருமணம்!

post image

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கேரள அரசியலிலும் தேசிய அளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. கடந்த 2020 ஜூலை மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்த தூதரக பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தூதரக பார்சல்களைத் தணிக்கையின்றி அனுப்பும் சிறப்பு அனுமதியைப் பயன்படுத்தி இந்த தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான பி.எஸ்.சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு என்.ஐ.ஏ, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கேரளத்தின் அன்றைய முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலகம் வரை தங்கம் கடத்தல் வழக்கு தொடர்புபடுத்தப்பட்டு பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 16 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு 2021-ல் ஜாமீன் பெற்ற ஸ்வப்னா சுரேஷ், பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது ஊழல் புகார்களை எழுப்பி வந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்துவரும் நிலையில், தங்கம் கடத்தலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், அதே வழக்கில் தொடர்புடைய பி.எஸ்.சரித்தை திருமணம் செய்துகொண்டார்.

ஸ்வப்னா சுரேஷ்

கொச்சி நெட்டூரில் உள்ள வடக்கு பாட்டுபுரைக்கல் பகவதி அம்மன் கோயிலில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோரது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா ஸ்ரேசும், திருவல்லம் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சரித்தும் தற்போது கொச்சியில் வசித்து வரும் நிலையில் இந்தத் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் செய்துகொண்டது குறித்து ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்

தனது ​திருமணப் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த ஸ்வப்னா சுரேஷ், ​"நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்காக மட்டும் இந்தத் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை; எங்கள் குழந்தைகள் உண்மை, மரியாதை மற்றும் நற்பண்புகளை கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழலை உருவாக்கவும், ஒன்றாக இணைந்து ஒரு புதிய வாழ்க்கையை கட்டமைக்கவுமே இணைந்திருக்கிறோம். மரணம் வரை நான் சுமங்கலியாகவே இருக்க அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியானது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலு... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: `அரசு மரியாதை வழங்கப்படும்' - அமைச்சர் நிர்மல் குமார்!

மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ - புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 ... மேலும் பார்க்க

BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் சிலர் எதிர்ப்பார்கள்'- செங்கோட்டையன்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண... மேலும் பார்க்க