செய்திகள் :

சாலமன் பாப்பையா: "சில நேரங்களில் கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர்.!"- கலங்கிய ராஜா

post image

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார்.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பட்டிமன்ற ராஜா, " அவர் மேடையில் பேசும்போது ஒரு ரசிகனாக நான் தரையில் அமர்ந்து பார்த்திருக்கிறேன்.

சாலமன் பாப்பையா

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரைப் பாராட்டுவதை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்கு கிடைத்த விருதுகள் மேன்மைகள் எல்லாவற்றிலும் நான் கூடவே இருந்திருக்கிறேன்.

புகழ் இல்லாத 70, 80 களில் பஸ், ரயில்களில் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் கடுமையான பயணங்களைக் கூட சந்தோஷமாக எடுத்துக்கொள்வார்.

சில நேரங்களில் நானே கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர் ஒரு நாளும் கோபப்பட்டது இல்லை. 'ஏழைகள் அவர்கள் கஷ்டப்பட்டு நிகழ்ச்சி செய்கிறார்கள் நமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது ' என்பார்.

இருப்பதை அனுசரித்து கொள்ள வேண்டும் என்பார். என்னையும், பாரதியையும் பிள்ளைகளாகவே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் கூட கடிந்து பேசியது கிடையாது.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

அவருக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அது எல்லாப் பேச்சாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். தமிழ் இருக்கும் வரை தமிழறிஞர் பாப்பையா அவர்களின் நினைவு இருக்கும்.

அவரோடு இருந்த காலம் எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம். அவர் இல்லை என்பது ஒரு வெறுமை தான்" என்று கலங்கி பேசியிருக்கிறார்.

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர்

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அ... மேலும் பார்க்க

பட்டிமன்றத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்த 'ஆசிரியர்'! – சாலமன் பாப்பையா நினைவுப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``கலங்கி நிற்கிறேன்... ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" - கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.மதுரை திருமங்கலம் அருக... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்..!" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞ... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: ' தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு' - பிரபலங்கள் இரங்கல்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிக... மேலும் பார்க்க

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உட... மேலும் பார்க்க