செய்திகள் :

அமெரிக்கா தாக்குதல்: 'மனிதநேயம் இருந்தால் 'இதை' தடுத்து நிறுத்துவார்களா?' - ஈரான் அதிபர் காட்டம்

post image

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தற்போது அமெரிக்கா தெற்கு ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானிய மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்.

ஈரான் அதிபர் பதிவு

இந்தத் தாக்குதல் குறித்து மசூத் பெஜெஷ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கர்கள் உண்மையான வீரர்கள் என்றால், எங்களது வீரம் மிக்க ராணுவப் படைகளுடன் நேரடியாகப் போரிடட்டும்.

மசூத் பெசெஷ்கியான் பதிவு
மசூத் பெசெஷ்கியான் பதிவு

அதை விட்டுவிட்டு, மக்களின் அடிப்படை உள்கட்டமைப்புகள், உணவு விநியோகம் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்?

அவர்களுக்குள் மனிதநேயம் இருந்தால், மக்களுக்கான நீர், உணவு மற்றும் மருந்துகள் கிடைப்பதைத் தடுத்து நிறுத்துவார்களா?

அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்துவிடும் மக்கள் எங்களது மக்கள் அல்ல. ஈரான் சரணடையாது” என்று பதிவிட்டுள்ளார்.

ஈரானை எப்படியாவது வழிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற அமெரிக்காவின் முயற்சிதான் இந்தத் தாக்குதல்கள்.

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் ஜி ஜின்பிங்; மோடி - ஜி ஜின்பிங் என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காகப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர். இந்தியா, சீனா மோதல்2019-ம் ஆண்டு ஜின்பிங் கடைசியாக இந்தி... மேலும் பார்க்க

'ஆல் தி பெஸ்ட் நண்பா!' - ரேஸை தொடங்கி வைத்த விஜய்; சீறிப் பாய்ந்த அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். AK - Vijayமுதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய்,... மேலும் பார்க்க

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' - குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார். குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்தச் சபை இயங்கி வருகிறது. இந்தச் சபைக... மேலும் பார்க்க

தொடரும் மின்வெட்டு: "'ப்யூஸ் போன' தவெக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்" - உதயநிதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ப... மேலும் பார்க்க

BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட... மேலும் பார்க்க