செய்திகள் :

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

post image

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தர்ஷன் கணேசன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

Lenin Pandiyan
Lenin Pandiyan

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, தன்னுடைய தம்பி கங்கை அமரன் நடித்திருப்பது பற்றி பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் இளையாராஜா பேசுகையில், "தர்ஷன் கணேசனின் நடிப்பை நான் இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணனின் பெயரையும், குடும்பத்துப் பெருமையையும் காப்பாற்றுகிற மாதிரி ரொம்பச் சிறப்பா பண்ணியிருக்கார்.

எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்கு புகழ் மற்றும் அனைத்து வளங்களையும் தந்து நீடூடி வாழ மனதார வாழ்த்துகிறேன். அதுமட்டுமில்லாமல், என்னுடைய தம்பியும் இதில் நடிச்சிருக்கான்.

இளையராஜா - கங்கை அமரன்
இளையராஜா - கங்கை அமரன்

அவனைப் பற்றிப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை; ஏற்கனவே அறிமுகமாகிவிட்டான். இருந்தாலும் இதில் ரொம்பவே சிறப்பா நடித்திருக்கிறான்.

இவன் என்கிட்டயே நடிப்பான்" என நகைச்சுவையாகப் பகிர்ந்தவர், "நிஜமாவே நல்லா பண்ணியிருக்கான் தம்பி! எல்லாரும் மனசார கை தட்டுங்களேன்! ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது" எனப் பேசினார்.

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" - முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய்அதில் தமிழ்நாடு முதல்வர் விஜ... மேலும் பார்க்க

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க