செய்திகள் :

தேசிய கீதத்துக்கு முன் வந்தே மாதரம் - இந்தியா, ஆப்கன் போட்டியில் நடந்த மாற்றம்!

post image

இந்தியா–விளையாடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும். ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பே, மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது வழக்கமாக ஒலிக்கப்படும் தேசிய கீதத்துக்கு முன்பாக, ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட்டது .

இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி
இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி

இதில் முக்கியமான விஷயம் இந்தப் போட்டியில் ‘வந்தே மாதரம்’ வழக்கமான சில வரிகளாக இல்லாமல், ஆறு சரணங்களுடன் முழுமையாக ஒலிக்கப்பட்டது . இதற்கு சுமார் 3 நிமிடங்கள் 10 விநாடிகள் எடுத்திருக்கிறது. தொடர்ந்து 52 விநாடிகள் தேசிய கீதம் ஒலித்துள்ளது.இரண்டும் சேர்ந்து 4 நிமிடங்கள் 2 விநாடிகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிகழ்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டை நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.அதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒரே நிகழ்வில் இடம்பெறும்போது, முதலில் ‘வந்தே மாதரம்’, பின்னர் ‘ஜன கண மன’ என்ற வரிசை பின்பற்றப்படுகிறது.

இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி
இந்தியா–ஆப்கானிஸ்தான் போட்டி

இதன்படி, இந்தியா–ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு முன்பு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதுவரை அரசு சார்ந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த முழு வடிவம், தற்போது சர்வதேச விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றுள்ளது. இது முதல் முறையாக ஒரு விளையாட்டு நிகழ்வில் நடந்துள்ள நிலையில், வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ‘ஜன கண மன’ மற்றும் ‘வந்தே மாதரம்’ இரண்டும் இடம்பெறுமா? என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?

லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த 'Michelin Le Mans Cup' கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொட... மேலும் பார்க்க

தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?

சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை... மேலும் பார்க்க

“ஒரு கேட்ச்... ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!

கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூ... மேலும் பார்க்க

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்' - முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன... மேலும் பார்க்க

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியா... மேலும் பார்க்க

Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்

தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக... மேலும் பார்க்க