செய்திகள் :

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

post image

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப்.

அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொளியில் அவர், சமீபத்தில் அவருக்கு நடந்த அனுபவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

Sherif - Choreographer
Sherif - Choreographer

அந்தக் காணொளியில் அவர், "நடன இயக்குநர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்கம் செய்திருந்தேன். அந்தப் பாடலின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, அதனுடைய காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு முறை, பின்னணி வடிவமைப்பு, லைட்டிங் என எல்லாவற்றையும் நானே தேர்ந்தெடுத்து ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதை அப்படியே பாடலின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்புத் தரப்பிடம் காண்பித்து ஒப்புதல் வாங்கி, அதேபோல பிரமாண்டமான செட் அமைத்தோம்.

முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஷாட் டிவிஷன் திட்டமிடல் முடித்து, நடன ஸ்டெப்களை உருவாக்கி அந்தப் பாடலையே முழுமையாகப் படமாக்கி முடித்தோம்.

ஆனால், அந்தப் பாடல் வெளியான பிறகுதான் எனக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரியவந்தது. அந்தப் பாடலுக்கு 'இயக்குநர்' என்று வேறொருவரின் பெயரைப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருந்தது.

Sherif - Choreographer
Sherif - Choreographer

இயக்குநர் அவருடைய வேலைகளைச் செய்துவிட்டு, அவரின் பெயரைப் போட்டிருந்தால் சரியாக இருக்கும். பொதுவாக, ஒரு பாடலில் ஒரு கதைக்களம் இருக்கும்போது அதற்கு நிச்சயமாக ஒரு இயக்குநர் தேவை.

நான் வெறுமனே நடன அசைவுகள் மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்லும் சூழலிலும் ஒரு இயக்குநர் தேவைப்படலாம்.

ஆனால், ஒரு நடனப் பாடலுக்கான எல்லாக் காட்சி அமைப்புகளையும், படப்பிடிப்புத் திட்டத்தையும் ஒரு நடன இயக்குநரே முன்னின்று செய்யும்போது, சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் 'இயக்குநர்' என்ற பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள்.

இது இன்னொருவருடைய உழைப்புக்கு அவர்களுடைய பெயரைப் போட்டுக்கொள்வது போல் உள்ளது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாடல் எவ்வளவு முக்கியமோ, அதுபோல அந்தக் காணொளியை உருவாக்கிய நடன இயக்குநருக்கும் அது முக்கியம்.

தயவுசெய்து எதிர்காலத்தில் இசை நிறுவனங்கள் ஒரு பாடலின் காணொளியைப் பெறும்போது, அதற்குப் பின்னால் இருக்கும் நடன இயக்குநரின் உழைப்பைப் புரிந்து கொண்டு தகுந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" - முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய்அதில் தமிழ்நாடு முதல்வர் விஜ... மேலும் பார்க்க