செய்திகள் :

விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளியான பகீர் தகவல்கள்

post image

மும்பை காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60) என்பவர் தனது குடும்பத்திடம் பங்குச்சந்தையைப் பயன்படுத்தி ரூ.10.81 கோடி மோசடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பார்தியிடம் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், 'இன்வெஸ்டாக்' என்ற வர்த்தக செயலியை உருவாக்குவதாகக் கூறி, 2020 ஆம் ஆண்டில் ஷாவின் சாப்ட்வேர் இன்ஜினியர் மகனுடன் குற்றம் சாட்டப்பட்ட ரோஷன் பூஷன் சேத் நட்பாகப் பழகியது விசாரணையில் தெரிய வந்தது.

அந்த நட்பைப் பயன்படுத்தி சஞ்சய் குடும்பத்தை அதிக அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தினார். மேலும் மற்ற முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைத்து இருப்பது போன்ற புள்ளி விபரங்களைக் காட்டி நம்ப வைத்துள்ளார்.

ரோஷன்
ரோஷன்

இதற்காக அவர் மும்பை சயான் மற்றும் மாட்டுங்காவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் முதலீட்டாளர்களைச் சந்தித்துள்ளார். ஷாவின் குடும்பத்தை நம்ப வைக்க, கடந்த டிசம்பர் மாதம் லாபம் என்று கூறி 3.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் ரோஷன் காணாமல் போனார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர். தொழில்நுட்பக் கண்காணிப்பைத் தொடர்ந்து, அவர் குஜராத் மாநிலம் வல்சாட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். துப்புரவுத் தொழிலாளி போன்று மாறுவேடமிட்டு அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்த அதிகாரிகள் மூன்று நாள் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து அவரைக் கைது செய்தனர்.

ஒவ்வொரு நகரிலும் ஒரு பெயர்

ரோஷன் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அடையாளத்துடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. தனது இளமை பருவத்தில் ஜெயேஷ் ஹஸ்முக்பாய் ஷா என்ற பெயரிலும், டெல்லியில் இருந்தபோது ராகுல் அதுல்பாய் பரேக் என்ற பெயரிலும் மற்றும் மும்பையில் ரோஷன் பூஷன் ஷேத் என்ற பெயரிலும் அடையாளத்தை மாற்றி வாழ்ந்து மோசடி செய்துள்ளார்.

அவரிடமிருந்து பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், மஹிந்திரா தார், 14 சொகுசு கைக்கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ.17 லட்சம் ரொக்கம், மூன்று குடியிருப்பு சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ரோஷன் விக் மூலம் தனது அடையாளத்தை அதிக அளவில் மாற்றி இருக்கிறார். அவருக்கு விக் ஏற்பாடு செய்து கொடுத்த சலூன் ஊழியர்கள் உட்பட 37 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனது அடையாளத்தை மறைக்க விக் அணிந்து, மூன்று வெவ்வேறு மாற்றுப்பெயர்களில் வாழ்ந்து, பங்குச் சந்தை மோசடி மூலம் முதலீட்டாளர்களை ரூ.30 கோடிக்கு மேல் ரோஷன் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரோஷன் பூஷன் சேத், சொகுசு குடியிருப்புகள், உயர்தர கார்கள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பாதிக்கப்பட்ட 42 பேரிடம் பங்குச்சந்தை முதலீடுகளில் 5 சதவீத மாதாந்திர வருமானம் தருவதாக உறுதியளித்து இந்த மோசடியைச் செய்துள்ளார்.

முதலீட்டாளர்களை நம்ப வைக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டதன் மூலம் அதிக லாபம் கிடைத்தது போன்று ஜோடிக்கப்பட்ட லாப அறிக்கைகளைக் காட்டியுள்ளார். பெண் உட்பட முதலீட்டாளர்களிடம் ரூ.30 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக போலீஸார் தங்களது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். ப... மேலும் பார்க்க

பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூ... மேலும் பார்க்க

மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை! - என்ன நடந்தது?

பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரெ... மேலும் பார்க்க

கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

கோவை கடந்த 12ம் தேதியன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க