செய்திகள் :

`Views அதிகமாகணும்!’ - 9 வயது சிறுவன் செய்த Click… அப்பாவின் ₹1.13 கோடி காலி!

post image

YouTube-ல் வீடியோ போட்டால் views வரணும், subscribers அதிகமாகணும் என்பதுதான் பல Content Creators-ன் ஆசை. ஆனால், அதற்காக ஒரு 9 வயது சிறுவன் செய்த காரியம் தற்போது இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!

அமெரிக்காவைச் சேர்ந்த Mike என்ற சிறுவன் ‘Mighty Mike Plays’ என்ற YouTube சேனலில் Minecraft மற்றும் Roblox கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். வீடியோக்களுக்கு போதிய views வராததால் அவர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவரது தந்தை Dave முதலில் ஒரு வீடியோவை YouTube விளம்பரமாக promote செய்ய சுமார் 20 டாலர் செலவு செய்திருக்கிறார். அப்போது பயன்படுத்திய company credit card, Google account-ல் save செய்யப்பட்டிருந்தது.

வீடியோ

அதன்பிறகு, விளம்பரத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பார்த்த 9 வயது Mike, அதிகமாக செலவு செய்தால் அதிக views கிடைக்கும் என நினைத்து, அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து விளம்பரங்களை இயக்கியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

முடிவில்… சுமார் $118,000! இந்திய மதிப்பில் சுமார் ₹1.13 கோடி விளம்பரச் செலவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சில வீடியோக்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான views-ஐ பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, குடும்பம் சேனலை நிறுத்துவது குறித்து முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியான தகவலின்படி, இந்தச் சம்பவத்தால் தந்தையின் வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு Click… ஒரு பாடம்!

குழந்தைகள் பயன்படுத்தும் online accounts-ல் saved payment details, parental controls, spending limits ஆகியவற்றை கவனிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.

Views-க்காக பணம் செலவிடுவது எளிதாக இருக்கலாம்… ஆனால் ஒரு Click-க்கு பின்னால் இருக்கும் செலவைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்!

"ஏன் வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்" - லாரி டிரைவராகப் பணியாற்றும் 25 வயது விமானப் பணிப்பெண்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நேஹா தாக்கூருக்கு, சிறுவயதிலிருந்தே லாரி அவ... மேலும் பார்க்க

அவதூறு ரீல்ஸ்; செருப்புடன் மன்னிப்பு கேட்கவைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்ட... மேலும் பார்க்க

ஹாலிவுட் வரை பிரபலம்... 108 ஆண்டு பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸ் லைசென்ஸ் சஸ்பெண்ட்! - ரெய்டில் ஷாக்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்... மேலும் பார்க்க

'ஷாருக், அஜய் தேவ்கன்; உங்களுக்கு நட்சத்திரங்களாக இருக்கலாம்; ஆனால் சட்டத்தை மீறியவர்கள்' - துகாராம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்... மேலும் பார்க்க

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்ன பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - இடமாற்றம் செய்த மேற்கு வங்க அரசு!

முஸ்லிம்கள் தங்களது முஸ்லிம் நண்பர்களை பார்க்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது வழக்கம். அப்படி அழைத்து பெண் போலீஸ் அதிகாரி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கூடுதல் போலீஸ் கண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்! | video

அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?மகாராஷ்டிராவ... மேலும் பார்க்க