செய்திகள் :

Doctor Vikatan: சாதாரண காய்ச்சலா, டெங்குவா... அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா?

post image

Doctor Vikatan: சமீபகாலமாக டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருவதையும், உயிரிழப்புகள் குறித்தும் செய்திகளில் கேள்விப்படுகிறோம்.

வீடுகளில், பணியிடங்களில் பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் இருப்பதையும் பார்க்கிறோம். அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு இருப்பது சாதாரண காய்ச்சலா, டெங்கு பாதிப்பா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடும்பநல மருத்துவரும் இன்டர்னல் மெடிசின் நிபுணருமான சாதனா தவப்பழனி

குடும்பநல மருத்துவரும் இன்டர்னல் மெடிசின் நிபுணருமான சாதனா தவப்பழனி
குடும்பநல மருத்துவரும் இன்டர்னல் மெடிசின் நிபுணருமான சாதனா தவப்பழனி

சாதாரண தொற்று மற்றும் டெங்கு பாதிப்பு என இரண்டு நிலைகளிலுமே நோயாளிக்குக் காய்ச்சல் இருக்கும். ஆனால், டெங்கு காய்ச்சலில் நோயாளிக்குக் கடுமையான உடல்வலி இருக்கும்.

டெங்கு பாதிப்பில் காய்ச்சலின் அளவு மிக அதிகமாக, அதாவது 103 டிகிரி முதல் 104 டிகிரி வரைகூட இருக்கலாம். அதோடு, நோயாளிக்குக் கடுமையான உடல்வலியும், தலைவலியும் சேர்ந்து இருக்கும்.

இந்தத் தலைவலி உண்மையில் கண்ணுக்குப் பின்னால் வலிப்பது போல் நோயாளிக்குத் தோன்றும். பொதுவாக இதை 'ரெட்ரோபல்பார் வலி' (Retrobulbar pain) என்று சொல்வோம். மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளி தனக்கு கண்களுடன் சேர்த்து கடுமையான தலைவலி இருப்பதாகச் சொல்வார்.

எனவே, அறிகுறிகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டும். சாதாரண காய்ச்சல் சில சமயங்களில் சளி, இருமல் போன்றவற்றுடன் வரும். இந்த அறிகுறிகள் இருந்தால், அது ஒரு வைரஸ் தொற்று, அதாவது மேல் சுவாசப்பாதை தொற்று (Upper Respiratory Tract Infection) என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
ஆனால், இந்த அறிகுறிகள் டெங்கு காய்ச்சலில் இருக்கவேண்டிய அவசியமில்லை. 

டெங்கு
டெங்குவை உறுதிசெய்யும் NS1 ஆன்டிஜென் (NS1 Antigen), IgM ஆகியவை 3 நாளடகளுக்குப் பிறகுதான் பாசிட்டிவ் ஆக வரும்.

டெங்கு காய்ச்சலை 'பிரேக்போன் ஃபீவர்' (Breakbone fever) என்றுகூட சொல்வதுண்டு. ஏனெனில், அதில் நோயாளிக்கு அந்த அளவுக்குக் கடுமையான உடல்வலி இருக்கும். மிக அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் கடுமையான உடல்வலி இருந்தால், அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்று நாம் சந்தேகிக்க வேண்டும்.

பொதுவாக, காய்ச்சல் தொடரும்போது நாம்  2 முதல் 3 நாள்களுக்குப் பிறகே ரத்தப் பரிசோதனை செய்து பார்ப்போம். காய்ச்சலின் முதல் அல்லது இரண்டாம் நாளில் டெங்கு பரிசோதனை  பாசிட்டிவ் (Positive) என்று காட்டாது. டெங்குவை உறுதிசெய்யும் NS1 ஆன்டிஜென் (NS1 Antigen), IgM ஆகியவை 3 நாள்களுக்குப் பிறகுதான் பாசிட்டிவ் ஆக வரும். எனவே, பொதுவாக 3 நாள்களுக்குப் பிறகே ரத்தப் பரிசோதனை செய்யுமாறு நோயாளிகளுக்கு  மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

டாக்டர் சாதனா தவப்பழனி

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் குடும்பநல மருத்துவர் மற்றும் இன்டர்னல் மெடிசின் நிபுணராகப் பணிபுரிபவர். கோவிட் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். 20 ப்ஸ் ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு!

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சிகிச்சையில் குணமாகாத வாய்ப்புண், காரமாகச் சாப்பிட்டால் எரிச்சல், தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்கு வாய்ப்புண் பாதிப்பு உள்ளது. நாக்கு மற்றும் செவிகளின் உள் பகுதியிலும் புண் உள்ளது. லேசான காரமான உணவுகள் சாப்பிட்டாலும் எரிச்சல் கடுமையாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புண் தெரிவதில... மேலும் பார்க்க

``நிலவேம்பு, பப்பாளி பயன்பாடு: கட்டுக்குள் டெங்கு; பரவும் உண்ணிக் காய்ச்சல்" - அருண்ராஜ் தகவல்!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு, உன்னிக் காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஊரெங்கும் பரவும் டெங்கு காய்ச்சல்... தடுப்பு மருந்தாக பப்பாளிச்சாறு குடிக்கலாமா?

Doctor Vikatan:டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பப்பாளி இலைச்சாறும் நிலவேம்புக் கஷாயமும் கொடுக்கச் சொல்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு எந்த அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கு பலன் அ... மேலும் பார்க்க

டெங்கு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு!; தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: பகல் முழுவதும் உழைப்பு... இரவில் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை... தீர்வென்ன?

Doctor Vikatan:என் அம்மா பகல் முழுவதும் கடினமாக உழைக்கிறார். ஆனாலும் இரவில் மன அழுத்தம் காரணமாக சரியாக உறங்காமல் டி.வி பார்த்துக் கொண்டே விட்டுவிட்டு உறங்குகிறார். மருத்துவரிடம் அழைத்தாலும் வர மறுக்கி... மேலும் பார்க்க