செய்திகள் :

ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க கோடிகளில் பேரமா? சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம்; பின்னணி என்ன?

post image

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென் டிரைவரையும் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொழிலதிபரும் ஜெம் கிராணைட் குழுமத்தின் தலைவரான வீரமணியை சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெம் வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து சென்னை போலீஸார் விசாரித்தனர்.

வீரமணிக்கு 84 வயதாகுவதால் அவரை புழல் சிறையிலேயே வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் சிறப்பு அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து புழல் சிறையிலேயே வைத்து வீரமணியிடம் துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட தொழிலதிபர் வீரமணியிடம் அவரின் தோழி சாந்தி குறித்து, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தீர்களா, இந்த வழக்கில் கைது செய்யாமலிருக்க பணம் கொடுத்தீர்களா உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. வீரமணி, வழக்கறிஞர் என்பதால் நாங்கள் கேட்ட கேள்விகளுக்குச் சாமர்த்தியமாகவே பதிலளித்தார்.

அவர் அளித்த தகவல்களைப் பதிவு செய்திருக்கிறோம். குறிப்பாக சாந்தி குறித்து கேள்வி கேட்டபோது அவரின் முகம் மாறியது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர், நான் தவறே செய்யவில்லை. அப்படியிருக்கும் போது எப்படி பணம் கொடுப்பேன் என்று பதிலளித்தார்.

இதையடுத்து வீரமணி அளித்த பதில்களை ரிப்போர்ட்டாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த வழக்கில் எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள், தகவல்களின்படி வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக விசாரிக்க ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றனர்.

வீரமணியின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சமூகத்தில் பெரிய மனிதர் என்ற அந்தஸ்தில் வலம் வந்தவர் வீரமணி. இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தியை வீரமணி முழுமையாக நம்பி தன்னுடைய பிசினஸில் சில முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து வைத்திருந்தார். இந்தச் சூழலில்தான் சாந்தியின் வீட்டுப் படுக்கையறையில் வீரமணியும் சிறுமியும் தனிமையிலிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ஒரு கும்பல் வெளியிட்டிருக்கிறது.

வீடியோவை எடுத்தது யாரென்று விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சாந்தி மீது வீரமணி கடும் மனவருத்தத்திலிருக்கிறார். வீடியோ விவகாரத்தை மூடி மறைக்க வீரமணி தரப்பு சிலருக்கு கோடிகளில் பணத்தைக் கொடுத்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இதில் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு வீரமணியைக் கைது செய்யாமலிருக்க யாரெல்லாம் டீலிங் பேசினார்கள் என்ற விவரத்தையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக வீரமணி, சாந்தி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்காத உதவி கமிஷனர் யாஸ்மினிடம் விசாரணை நடத்தி அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை

இதற்கிடையில் வீரமணிக்கு எதிராக சில தகவல்களை சாந்தி தரப்பு சொல்லியிருக்கிறது. குறிப்பாக வீரமணியால் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும் சாந்தி தரப்பே தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலத்தையும் பெற்றியிருக்கிறோம். இது வீரமணிக்கு எதிரான ஆதாரங்களில் முக்கியமானது.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் எந்த ஆதாரங்களும் கிடைக்காத சூழலில் தற்போது வழக்குக்குத் தேவையான ஆதாரங்களும் சாட்சிகளும் கிடைத்துவிட்டன. அதனால் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுப்போம்'' என்றனர்.

கும்பகோணம்: திமுக பிரமுகருக்குச் சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும... மேலும் பார்க்க

`ரூ.60 கோடி தங்கப் புதையல் கிடைச்சிருக்குது!’ – மளிகைக் கடை அண்ணாச்சியை ஏமாற்றி ரூ.20 லட்சம் `அபேஸ்’

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ராஜா, எட்டயபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர், `மளிகைக் ... மேலும் பார்க்க

தொழில்துறை : `கெஸ்ட் ஹவுஸுக்கு வரச்சொன்ன முதல்வரின் உதவியாளர்' - தெலங்கானா பெண் தொழிலதிபர்

தெலங்கானா மாநிலத்தில் விளம்பரத்துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக முயன்ற பெண் தொழிலதிபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பேசுபொருளாகியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கே. சோபா ... மேலும் பார்க்க

சாதி ரீதியான துன்புறுத்தலால் மாணவர் தற்கொலை? போராடிய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மும்பை ஐஐடி

மும்பை ஐ.ஐ.டியில் தேர்வில் மொபைல் போன் மூலம் காப்பியடித்த மாணவர் சாஹில் பிடிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தேர்வு மையத்தில் இருந்த பேராசிரியர் சூரிய நாராயணா மாணவனை ... மேலும் பார்க்க

காட்பாடி: பானிபூரி கடையில் ரூ.500 மாமூல் கேட்டு மிரட்டல்; 4 இளைஞர்கள் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 42) மற்றும் இவரின் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடியில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இவர்... மேலும் பார்க்க

மதுரை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தில் தஞ்சம் புகுந்து மாணவர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.அலங்காந... மேலும் பார்க்க