செய்திகள் :

வீரமணி பாலியல் வழக்கு: "அவரிடம் அதிக நிதி வாங்கியதே..." - நிர்மலின் குற்றச்சாட்டுக்கு RS பாரதி பதில்

post image

ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி வருகிறது. தவெக - திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்களை த.வெ.க-வுடன் ஐக்கியமாக்கிவிட்டதா? அப்படியென்றால் கூட்டணிக் கட்சிகளின் பிரசாரத்துக்கு ஆகும் செலவையும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருக்கிறேன்.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

த.வெ.க வேட்பாளர்களை தொகுதிக்குள்ளேயே மக்கள் அனுமதிப்பதில்லை. அதனால் காவல்துறை பாதுகாப்புடன் பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு அளித்து வருவதால், திமுகவுக்கு பாதுகாப்பு தேவைப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் வீரமணி தப்பிக்க வைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டுகிறார். ஆனால், அவரிடம் அதிக நிதி பெற்றவரே நிர்மல்குமார்தான் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் இயல்பாக வந்த தேர்தல் அல்ல. வெற்றி பெற்ற அ.தி.மு.க-வின் இரண்டு எம்.எல்.ஏ.க்களை த.வெ.க ரூ. 35 கோடி கொடுத்து வாங்கியதால் உருவான இடைத்தேர்தல். தி.மு.க தலைவரின் பிரசாரத் திட்டங்கள் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்" என்றார்.

"மக்கள் தங்குவதற்கு கட்டடம் இருக்கு; ஆனால்..." - விகடன் செய்திக்கு எழும்பூர் மருத்துவமனை விளக்கம்

முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உதவியாக வரும் உறவினர்கள் வராண்டாவில் நெருக்கடியில் படுத்திருப்பதாக விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம... மேலும் பார்க்க

TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில், தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்த `திருமா 35 ஆண்டுகள்' சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வி... மேலும் பார்க்க

"போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?"- மது ஒழிப்பு கூட்டமைப்பு

"டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்?

ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது.இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும்.அப்படித்தான் ரஷ்யப் போரிலும... மேலும் பார்க்க

`பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' - அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச்சேர்ந்தவர் ரோகிணி. இவர், த.வெ.க தெற்குமாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெங்கிய நண்பரான மணப்பாடு ரூஸ்வெல்ட்டுடன் கடந்த ஓராண்டாக நெருக்கமா... மேலும் பார்க்க