செய்திகள் :

'The Paradise படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி இருக்கிறதா?' - நானி சொல்வது என்ன?

post image

'தசரா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The Paradise Movie
The Paradise Movie

இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைச் சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவும், நடிகர் நானியும் பகிர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசுகையில், "நான் சிறுவயதில் எனது சொந்த ஊரில் வளர்ந்தபோது நேரில் பார்த்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

'தி பாரடைஸ்' திரைப்படம் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும்.

ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டமாகவும், சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டமாகவும் இது இருக்கும்.

மேலும், தன் நாட்டிற்காகப் போராடிய மக்கள், கடைசியில் தங்களுக்குச் சொந்த நாட்டில் இடமே இல்லை என்பதை உணரும்போது அவர்களின் போராட்டம் வேறு திசையை நோக்கி மாறுகிறது. அதுவே இந்தப் படத்தின் மையக் கதை" என்று விளக்கியுள்ளார்.

நானி
நானி

அவரைத் தொடர்ந்து இப்படம் தொடர்பாகப் பேசிய நடிகர் நானி, "என்னுடைய 18 ஆண்டுகாலத் திரைவாழ்க்கையில் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வடைய செய்த படம் இதுதான்.

அதுபோல, மிகவும் கடின உழைப்பைக் கோரிய திரைப்படமும் இதுதான். மேலும், படத்தில் நீருக்கடியில் சண்டை போடும் காட்சிகள் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்திகள்தான்.

படத்தில் அதுபோன்ற காட்சிகள் எதுவுமில்லை" என விளக்கமளித்திருக்கிறார்.

Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej - Lavanya Tripathi's Sonத... மேலும் பார்க்க

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2இத்தி... மேலும் பார்க்க

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்க... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்த... மேலும் பார்க்க

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில்... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hi... மேலும் பார்க்க