செய்திகள் :

"ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா..!"- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த்

post image

'மொத ராத்திரி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'டோரதி' படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.

'மொத ராத்திரி'
'மொத ராத்திரி'

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிஷிகாந்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "ரஜினிகாந்த் சார் மாதிரி நான் இருக்கிறதாக என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இதைக் கேட்பதற்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும், நான் சுயமாகச் செய்த ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

ரிஷிகாந்த்
ரிஷிகாந்த்

எல்லோருக்குமே ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத முன்னுதாரணம். 'மனிதன்' திரைப்படம்தான் நான் பார்த்த முதல் ரஜினிகாந்த் படம். 'படையப்பா' மற்றும் இன்னும் சில படங்களின் கேசட்டுகள் என்னிடம் இருந்தன, அவற்றை அடிக்கடி பார்ப்பேன். எனக்கு 'பாபா' திரைப்படம் மிகவும் பிடிக்கும், தியேட்டரில் நான் பார்த்த அவருடைய முதல் திரைப்படம் 'சிவாஜி'" என்று பேசியிருக்கிறார்.

Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் - காரணம் என்ன?

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அன்பில் அவன்' திரைப்படம்.'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்க... மேலும் பார்க்க

``மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" - ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி

'ஹிப்ஹாப் தமிழா' ஆதி இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படம், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹர்ஷத் கான், சைத்ரா ஜே.ஆச்சார், கேட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்க... மேலும் பார்க்க

jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்?

'ஸ்கிரிப்ட் தயாரானதும் என்னுடைய சித்தப்பாகிட்டதான் பேசினேன். 'படம் பண்ணப் போறேன், எங்கூட இருப்பீங்களா'னு கேட்டேன். அவரும் ஓ.கே. சொன்னதுடன் படம் தொடங்குனதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இ... மேலும் பார்க்க

"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" - எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் லெஜெண்ட் சரவ... மேலும் பார்க்க

Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல..."- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ... மேலும் பார்க்க

யுத்தம் செய் : தனித்துவமான கலை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 26

`சினி'ஸ்கோப் 26யுத்தம் செய் : தனித்துவமான கலை!சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் ஓரிரு அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதற்குள் வெட்டப்பட்ட மனிதக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் காவல்துறைய... மேலும் பார்க்க