செய்திகள் :

Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல..."- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து

post image

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர்.

விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகிய மூவரும் இணைந்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.

‘அன்பில் அவன்’
‘அன்பில் அவன்’

அத்தோடு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, 'தர்மன்' திரைப்படம் தொடர்பாகப் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "என்னுடைய தொடக்கம் இங்குதான் அமைந்தது. என்னுடைய முதல் படத்தைத் தயாரித்ததும் 'ஹேப்பி ஹை பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம்தான். அதனால் கண்டிப்பாக நான் இந்த நிகழ்வுக்கு வந்தாக வேண்டும் என விரும்பினேன்.

'அன்பில் அவன்' கதையை நான் படித்திருக்கிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும். இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை, கார்த்திகேயனின் இயக்கம், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு, 'ஹேப்பி ஹை பிக்சர்ஸ்' தயாரிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் சிறப்பாக உருவாகியுள்ளது" என்றவர், 'தர்மன்' திரைப்படம் குறித்து, "மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, படப்பிடிப்பு சரியாகத் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது.

Ashwath Marimuthu
Ashwath Marimuthu

படத்தின் வேகம் மற்றும் குவாலிட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஜினி. நான், அசோக் செல்வன் உட்பட அனைவரும் அவருடைய மிகப்பெரிய ரசிகர்கள்.

நான் என்னுடைய இரண்டு படங்களிலும் என்னுடைய நண்பர்களுடன்தான் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படம் தொடங்கும்போது அதனை யோசித்து பயந்தேன்.

அவருடைய பணியாற்றும் விதம் அற்புதமாக இருக்கிறது. 50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல அந்த எக்சைட்மென்டோடு பணியாற்றி வருகிறார்." எனக் கூறினார்.

"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" - எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் லெஜெண்ட் சரவ... மேலும் பார்க்க

யுத்தம் செய் : தனித்துவமான கலை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 26

`சினி'ஸ்கோப் 26யுத்தம் செய் : தனித்துவமான கலை!சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் ஓரிரு அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதற்குள் வெட்டப்பட்ட மனிதக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் காவல்துறைய... மேலும் பார்க்க

Anbil Avan: "வீட்டை அடமானம் வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்" - அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ... மேலும் பார்க்க

"'அந்தோனி'க்கு விருது இல்லேனாலும் கூட" - ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்

இளையராஜா இசையில் முதல் முறையாக உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான 'அந்தோனி', இப்போது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான ... மேலும் பார்க்க

Rakka: "ஒரே நேரத்தில் 37 பேர்!" - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படம்!

'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் 'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அல்லு அர்ஜுனும் 'புஷ்பா 2' படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்த... மேலும் பார்க்க

"14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது" - தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன்

நடிகை சோஹா அலிகானின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தனது கருத்தரிப்பு பிரச்னை குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அதில், "PCOS, கருத்தரிப்பைச் சவாலானதாக மாற்றும் என்று முதலில் கூறப்பட்டபோது எனக்... மேலும் பார்க்க