செய்திகள் :

ஜெம் வீரமணி: `மொபைலில் சிறுமியின் பாலியல் வீடியோ'- வீரமணியின் வலதுகரம் கைது.. வேகமெடுக்கும் விசாரணை!

post image

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி 29.08.2026- ம் தேதி கைது செய்யப்பட்டார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தொழிலதிபர் வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து சென்னை போலீஸார் விசாரித்தனர். 84 வயதான வீரமணியை வெளியில் அழைத்து வந்து விசாரிப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால், சிறப்பு அனுமதி பெற்று புழல் சிறையிலேயே போலீஸார் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

கைது
கைது

இந்த நிலையில்தான் வீரமணிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட கணேசன் என்பவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் சிறுமியுடன் வீரமணி இருக்கும் வீடியோ இருந்தது. அந்த வீடியோ குறித்து கணேசன், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் அவரை போலீஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், கைதுசெய்யப்பட்ட கணேசன், 23 ஆண்டுகளாக வீரமணி நடத்தி வரும் ஜெம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். தற்போது வேறு ஒரு நிறுவனத்தில் கணேசன் வேலை செய்து வருகிறார். இவருக்கு வீரமணியின் ரகசியங்கள் தெரியும் என்பதால், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். கணேசனுக்கு சிறுமியின் ஆபாச வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது. கணேசன் வாயை திறக்கும் போது இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்று சொல்கிறார்கள் சென்னை போலீஸார்.

சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை - ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி' பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (58), இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

உறவை முறித்த `ஆசிரியை'யான காதலி; மாணவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்று விபரீத முடிவெடுத்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்... மேலும் பார்க்க

நடுரோட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்" - பீகார் அமைச்சர் பேச்சு

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து தனது ஆண் நண்பருடன் திரும்பிக்கொண்டிருந்த 10வது மாணவியை ஒரு கும்பல் வழிமறித்துச் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவர்களைத் தாக்க... மேலும் பார்க்க

நண்பருடன் கோயிலுக்கு சென்ற சிறுமி; போலீஸ் எனக்கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை - டெல்லி அதிர்ச்சி

டெல்லியில் கடந்த வாரம் தான் தனது நண்பர்களுடன் சென்ற மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு திறந்த வெளியில் வீசப்பட்டார். அதற்குள் மேலும் ஒரு கூட்டு பாலியல்... மேலும் பார்க்க

ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க கோடிகளில் பேரமா? சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம்; பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென் டிரைவரையும் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொழிலதிபரும் ஜெம் கிராணைட் குழுமத்தின் தலைவரான வீரமணியை சென்ன... மேலும் பார்க்க

கும்பகோணம்: திமுக பிரமுகருக்குச் சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும... மேலும் பார்க்க