செய்திகள் :

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

post image

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கும் இடையே முரண்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வீரபாண்டியன், "அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் இல்லை என்றாலும் நாங்கள் அரசின் பக்கம் அல்ல, உழைக்கும் மக்கள் பக்கம், ஏழைகளின் பக்கம்.

பெ.சண்முகம், வீரபாண்டியன்
பெ.சண்முகம், வீரபாண்டியன்

எந்த நேரத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. அதேநேரத்தில் மதச்சார்பின்மை என்ற விவகாரத்தில் அரசு சரியான நிலைபாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

அதில் மாறுகிறபோது நாங்கள் எதிர்ப்போம், போராடுவோம். பிற கட்சிகளின் ஆட்சியையும் சரி என்றால் ஆதரிப்போம், தவறு என்றால் விமர்சிப்போம். நீங்கள் (தவெக) 5 ஆண்டுகள் செய்யும் தவறுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்?

அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும்.

முந்தைய திமுக ஆட்சி பற்றி எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு. நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவுதான்.

எங்கள் நூற்றாண்டு கால வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

எனவே, ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஊழலுக்காக எந்தக் கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்தவொரு நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியப்படவில்லை" என்று பேசியிருக்கிறார்.

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே...” - விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நில... மேலும் பார்க்க

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" - விஜய்யைச் சாடிய சீமான்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கா... மேலும் பார்க்க