செய்திகள் :

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

post image

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்‌. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில், தாராபுரம் தனி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்தார். தற்போது த.வெ.க கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். இந்த விவகாரம் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி த.வெ.க மற்றும் விவசாய அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராகப் பிரசாரக் கூட்டங்களில் சிலர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்தியபாமா பிரசாரத்துக்கு 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிக்க அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்ப... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ரூ.16.40 கோடி சொத்து, 3 குற்ற வழக்குகள்; 2லும் முதல் இடத்தில் TVK வேட்பாளர் சத்தியபாமா

தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு சரிபார்ப்பு நேற்று மாலை நிறைவடைந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்புமனுக்களைத் தேர்வு ஆணையம் ஏற்று... மேலும் பார்க்க

"அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்" - கொந்தளித்த திண்டுக்கல் சீனிவாசன்

தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பானுமதி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அக்கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க

தாராபுரம்: "மீண்டும் மக்கள் சேவையில்..." - தவெக வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த ராஜினாமா MLA சத்யபாமா

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைய இருக்கிறது. தாராபுரம் தொகுதியைப் ... மேலும் பார்க்க

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்..."- தி‌முக வேட்பாளர் காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளி... மேலும் பார்க்க