செய்திகள் :

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" - விஜய்யைச் சாடிய சீமான்

post image

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.

நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மு.கார்த்திகாவை ஆதரித்து சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அப்போது பேசிய அவர், "இந்த ஆட்சியில் 'நோ' ரூல்ஸ் எல்லாம் ரீல்ஸ்தான். ஜெயிலுக்கு எதற்கு சென்றார் எனத் தெரியவில்லை. யாரோ ஒரு ஜோசியக்காரர் சொல்லியிருக்கிறார் ஜெயிலில் உங்களுக்கு ஒரு கண்டம் இருக்கிறது போய் கை நினைத்துவிட்டு வாருங்கள் என்று...

உங்களுக்குத் திருஷ்டி அதிகமாக இருக்கிறது. கருப்பு கோட் போட்டுக்கொள்ளுங்கள், நெற்றியில் கருப்புப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம். கடற்கரையைப் பார்த்த மாதிரி இருக்க வேண்டும். அதுதான் உங்கள் ராசிக்குச் சரியாக இருக்கும் என்று சொன்னவுடன் அலுவலகத்தையே அங்கு மாற்றுகிறார்" என்று முதல்வர் விஜய்யை சீமான் சாடியிருக்கிறார்.

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே...” - விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நில... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விலை உயர்வு: "நாங்கள் காரணமா? Hitler Strategy இது" - அமெரிக்காவைச் சாடும் ஈரான்

தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம்.இதனால், கச்சா எண்ணெய் ... மேலும் பார்க்க

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’ –அமைச்சர் கீர்த்தனாவின் ஆபரேசன் குறித்து கனிமொழி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்... மேலும் பார்க்க

"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" - உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.இந்தப் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை, தடைகள், சட்டங்கள் எனக் கடுமையாக ம... மேலும் பார்க்க