செய்திகள் :

கச்சா எண்ணெய் விலை உயர்வு: "நாங்கள் காரணமா? Hitler Strategy இது" - அமெரிக்காவைச் சாடும் ஈரான்

post image

தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம்.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஈரான் போரில் இருக்கும் மூன்று நாடுகளுக்குமே பங்குண்டு.

ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு நீங்கள்தான் காரணம்... நாங்கள்தான் காரணம் என்று அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.

இஸ்மாயில் பாகாயி பதிவு
இஸ்மாயில் பாகாயி பதிவு
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்...

“எரிபொருள் விலை உயர்விற்கு அமெரிக்க அதிகாரிகள் ஈரான் மீது பழி சுமத்துகிறார்கள்.

ஆக்கிரமிப்புப் போரை உண்மையில் யார் தொடங்கியது... யாருடைய நடவடிக்கைகள் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் மூடு விழாவிற்கும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துப் பாதிப்பிற்கும் நெருக்கடியை உருவாக்கின என்பதை மறந்துவிடும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

ஹிட்லரும்...

ஆனால், இது ஒன்றும் புதிய தந்திரம் அல்ல. 1939-இல் ஹிட்லரும் போலந்து மீதான தனது படையெடுப்பை இதே போன்று ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றே சித்தரித்தார்.

சட்டவிரோதமான ஒரு ‘விருப்பப் போரை’த் தூண்டியவர், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளுக்குப் பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் போது, அதை ‘ராஜதந்திர புத்திசாலித்தனம்’ என்று பார்க்க வேண்டுமா அல்லது வெறும் மடமையின் சான்றாகப் பார்க்க வேண்டுமா?!”

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" - விஜய்யைச் சாடிய சீமான்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கா... மேலும் பார்க்க

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’ –அமைச்சர் கீர்த்தனாவின் ஆபரேசன் குறித்து கனிமொழி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்... மேலும் பார்க்க

"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" - உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.இந்தப் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை, தடைகள், சட்டங்கள் எனக் கடுமையாக ம... மேலும் பார்க்க

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் | Photos

இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்கள் தடை: "இரும்புத் திரை" - அமெரிக்காவைச் சாடும் ஈரான்

CNN, MS NOW, Politico ஆகிய மூன்று அமெரிக்கச் செய்தி நிறுவனங்களையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் சென்று செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளார்.ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து இந்த மூன்று ... மேலும் பார்க்க