செய்திகள் :

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

post image

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசிக்க பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். லால்பாக் ராஜாவைத் தரிசிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கெளரி, மகள் சுஹானா, பெண் மேலாளர் பூஜா ஆகியோருடன் வந்திருந்தார்.

கணவன் மனைவி இருவரும் லால்பாக் ராஜாவிற்கு ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். அவர் குடும்பத்தோடு விநாயகரைத் தரிசித்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. அவ்வாறு வைரலான ஒரு காணொலி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. லால்பாக் ராஜாவைத் தரிசித்தபோது ஷாருக்கான் கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது.

குடும்பத்துடன் ஷாருக்கான்
குடும்பத்துடன் ஷாருக்கான்

உடனே கௌரியும் சுஹானாவும் அருகில் நின்று கொண்டிருந்தபோது, ​​மேலாளர் பூஜாவின் துப்பட்டாவை இழுத்து ஷாருக்கான் தனது முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மனைவி அல்லது மகள் அருகில் இருக்கும் போது அவர்களின் துப்பட்டாவை ஷாருக்கான் ஏன் பயன்படுத்தவில்லை என்று பல சமூக ஊடக பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் ஷாருக்கானின் ரசிகர்கள் இந்தச் செயலை நியாயப்படுத்தியுள்ளனர். பூஜா தத்லானியுடன் அவருக்கு நெருக்கமான மற்றும் நீண்டகால தொழில்முறை உறவு இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

குடும்பத்துடன் ஷாருக்கான்
குடும்பத்துடன் ஷாருக்கான்

பல ரசிகர்கள் இந்தச் சம்பவம் வெறுமனே தன்னிச்சையானது என்றும் அதனை மிகைப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் மகள் சுஹானா கான், தீபிகா படுகோன், அபய் வர்மா, ராகவ் ஜூயல், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அர்ஷத் வார்சி மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

'துவா'வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: "அவரை எனக்கு தெரியாது" - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம்... மேலும் பார்க்க

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டு... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) ... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மர்மமான முறையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போனார். சுஷாந்த் சிங் தற... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. வைரம் பதித்த தங்க வளை... மேலும் பார்க்க