செய்திகள் :

`பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' - அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி

post image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச்சேர்ந்தவர் ரோகிணி.  இவர், த.வெ.க தெற்குமாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெங்கிய நண்பரான மணப்பாடு ரூஸ்வெல்ட்டுடன் கடந்த ஓராண்டாக நெருக்கமான பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே ரூஸ்வெல்ட்டை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த ஜூன்மாதம் 26-ம் தேதி ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் பறித்து விட்டு தப்பியோடியுள்ளார்.  இதுகுறித்து ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி மொபைலை பறித்துச் சென்ற தேரியூரைச் சேர்ந்த புனிதராஜை கைது செய்தனர்.

எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த ரோகிணி

”த.வெ.கவைச் சேர்ந்த ஆலந்தலை சிபாஸ், மணப்பாடு ரூஸ்வெல்ட் ஆகியோர் கூறியதன் அடிப்படையில் மொபைல்போனை பறித்து அவர்களிடம் கொடுத்தேன்” என போலீஸாரிடம் கூறியுள்ளார் புனிதராஜ். இதனையடுத்து சிபாஸூம் கைது செய்யப்பட்ட நிலையில்  ரூஸ்வெல்ட் தலைமறைவானார்.

இவர், அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே கைது செய்வதில் மெத்தனம் காட்டுகிறது காவல்துறை என, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

 ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் ரூஸ்வெல்ட்.  இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி, தூத்துக்குடி செயிண்ட் மேரீஸ் காலனியைச் சேர்ந்த தேவி என்பவர்,  “கடந்த 2024-ம் ஆண்டுதூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். எனது கைப்பையில் 8 சவரன் தங்கநகைகளை (6 சவரன் செயின், 1 சவரன் கைசெயின், அரை சவரன் கம்மல், அரை சவரன் மோதிரம்) வைத்து என் தாய் சேசுமேரியிடம் கொடுத்துவிட்டு அறுவை சிகிச்சைக்காக சென்றிருந்தேன்.

அமைச்சர் ஸ்ரீநாத்துடன் ரூஸ்வெல்ட்

அப்போது என்னுடன் ஏர்டெல் கம்பெனியில் பணிபுரிந்த ரோகிணி  மற்றும் ஜெனி என்னை பார்க்க வந்துள்ளனர்.  என் தாயிடமிருந்த கைப்பையை பெற்று அதிலிருந்த 8 சவரன் நகைகளை ரோகிணி, ஜெனி ஆகியோர் திருடிச் சென்றுள்ளனர்.  இதுதொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ஜெனி 4 சவரன் நகைகளைஒப்படைத்துவிட்டார். ஆனால், ரோகினி தற்போது வரை நகைகளை திருப்பித்தரவில்லை.

நகைகளை கேட்டால் என்னை மிரட்டுகிறார்.  அவரிடமிருந்து நகைகளை மீட்டுத்தர வேண்டும்” என  மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசுகிற ரோகிணி, “தேவியை மருத்துவமனையில் பார்க்கச் சென்றபோதுஎன்னுடன் தேவியின் தோழி ஜெனி என்பவரும் வந்திருந்தார். நகைகளை எடுத்தது அவர்தான். இதை அவரே தென்பாகம் காவல் நிலையத்தில்ஒப்புக்கொண்டு 5 சவரன் நகையை தேவியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். அவருடன் நான் சென்றதற்காக வேண்டுமென்றே என்னையும் வழக்கில் சேர்க்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அதுவும் அவர் முன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது ஏன் கிளறவேண்டும்? ரூஸ்வெல்ட்டின் தூண்டுதலே இதற்கு காரணம்.

புகார் அளித்த ரோகிணி

ரூஸ்வெல்ட் மீது நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி அவர் தரப்பினர் பல வழிகளில் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் என் மீது கொடுக்கப்பட்ட இந்த புகார் மனு. ரூஸ்வெல்ட்டால் என் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் புகாரை நான் வாபஸ் வாங்கப்போவது இல்லை. ஏற்கெனவே என் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். தற்போது இந்த என் மீதுஅளிக்கப்பட்ட பொய் புகார் குறித்தும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.” என்றார்.

இது குறித்து ரூஸ்வெல்ட்டிடம் பேசினோம், “கட்சியில் முக்கிய நிர்வாகிகள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் நெருக்கமாகப் பேசுவதுதான் அந்த பெண் நிர்வாகியின் வேலை. தேர்தலுக்கு முன்பாக அவர் தனியாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்று ரூ.2,25,000 ரூபாய் கடனாகக் கேட்டார். எனக்கு ஒரு அவசர தேவை ஏற்பட்டபோது அந்த பணத்தை திருப்பிக் கேட்டேன். பணத்தை தர முடியாது எனன் கூறி மறுத்ததுடன் என் மீது வீண் பழி சுமத்துகிறார்.

அமைச்சர் ஸ்ரீநாத்துடன் ரூஸ்வெல்ட்

தூத்துக்குடி த.வெ.க தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களின் பரிந்துரைப் பெயர் பட்டியலில் எனது பெயரும் உள்ளது. எனக்கு பதவி கிடைத்துவிடக்கூடாது என எதிர் அணியினரின் தூண்டுதலின் பேரில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார். கட்சித் தலைமையிடம் என் தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டேன். தேவி என்ற பெண் அளித்த புகாருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.” என்றார்.    

"போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?"- மது ஒழிப்பு கூட்டமைப்பு

"டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்?

ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது.இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும்.அப்படித்தான் ரஷ்யப் போரிலும... மேலும் பார்க்க

``தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" - அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலி... மேலும் பார்க்க

வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி

தவெக - இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், பள்ளிக்... மேலும் பார்க்க

'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்?

உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள் தொங்கியிருந்தன.‘UPI பேமென்ட்கள் இங்கு கூடாது’.‘பானிபூரி: பணம் - ரூ.50; UPI - 51’.இது MDR அறிமுகப்படுத்தியதும் எதிர்பார்த... மேலும் பார்க்க

முதல்வர் லண்டன் பயணம்: ``அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்..." - மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்... மேலும் பார்க்க