செய்திகள் :

``தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" - அமைச்சர் நிர்மல் குமார்

post image

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி பாலியல் வன்கொடுமை விவகாரம் எந்தக் காலகட்டத்தில் நடந்தது, எதனால் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அந்த நிறுவன உரிமையாளர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், யாருடைய தலையீட்டினால் அந்த வழக்கு விசாரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது? அப்போதைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், இவ்வளவு பெரிய குற்றம் சென்னை நகரத்திலேயே நடந்தும், அது ஏன் அவரது ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது?

பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையான தீவிரமான ஒரு சம்பவம் இது. யார் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியைத் தப்பிக்க விட்டார்கள் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். தற்போதைய ஆட்சியில் எந்தவொரு சட்ட நடைமுறைத் தவறுகளுக்கோ அல்லது யாருக்கான விதிவிலக்குகளுக்கோ இடம் கிடையாது. சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும். எனவே, ஸ்டாலின் அவர்கள் தனது அரசியல் பயணத்திற்கு எண்ட் கார்டு போடுவதற்கு முன்பாக, தனது ஆட்சிக் காலத்தில் நடந்த இந்தத் தவறுக்கு முதலில் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?"- மது ஒழிப்பு கூட்டமைப்பு

"டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்?

ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது.இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும்.அப்படித்தான் ரஷ்யப் போரிலும... மேலும் பார்க்க

`பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' - அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச்சேர்ந்தவர் ரோகிணி. இவர், த.வெ.க தெற்குமாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெங்கிய நண்பரான மணப்பாடு ரூஸ்வெல்ட்டுடன் கடந்த ஓராண்டாக நெருக்கமா... மேலும் பார்க்க

வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி

தவெக - இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், பள்ளிக்... மேலும் பார்க்க

'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்?

உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள் தொங்கியிருந்தன.‘UPI பேமென்ட்கள் இங்கு கூடாது’.‘பானிபூரி: பணம் - ரூ.50; UPI - 51’.இது MDR அறிமுகப்படுத்தியதும் எதிர்பார்த... மேலும் பார்க்க

முதல்வர் லண்டன் பயணம்: ``அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்..." - மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்... மேலும் பார்க்க