செய்திகள் :

மேட்டூர் அணை: ``முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" - உதயநிதி விமர்சனம்

post image

தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

குறுவை சாகுபடிக்குத் திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்தச் சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி எனக் குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியைத் திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு தினத்தந்தி பேப்பரைப் படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.

ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறப்பேன் என்று வெற்று வசனங்களைப் பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளைச் சந்திக்ககூட மனம் வரவில்லை.

திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களைக் கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில்தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது. விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் லண்டன் பயணம்: ``அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்..." - மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? 'லாட்டரி மாபியா' தானே?" - பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியின... மேலும் பார்க்க

'உட்கார கூட இடமில்ல...' - முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகுமே அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை என மருத்துவமனையில... மேலும் பார்க்க

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” - பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் த... மேலும் பார்க்க

ஸ்டாலின், எடப்பாடி முதல் சூர்யா, கார்த்திக் வரை; பிரபலங்கள் குவிந்த திருமண விழா; பின்னணி என்ன?

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க