செய்திகள் :

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” - பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

post image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தல் உட்பட பல தேர்தல்களில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகச் சில தினங்களுக்கு முன்பு கருப்பு முருகானந்தம் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

திருச்சியில் வசித்த பா.ஜ.க பெண் நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி, தலைமையிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகச் சொல்லப்பட்டது.

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் பேசும் கருப்பு முருகானந்தம்
முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் பேசும் கருப்பு முருகானந்தம்

இந்த விவகாரம் சலசலப்பைக் கிளப்பிய நிலையில் இது முழுக்க பொய்யான குற்றச்சாட்டு, அந்தப் போட்டோ AIல் உருவாக்கப்பட்டவை எனக் கருப்பு முருகானந்தம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திவ்யா சேஷாத்ரியும் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில், 34வது விநாயகர் ஊர்வலம் நடந்தது.

இதில் கலந்துக்கொண்ட பா.ஜ.க-வின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசியது சமூக ஊடகலிங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது, "அரசியலில் சூழ்ச்சிகள் இருக்கத்தான் செய்யும். யார் நம் உடன் இருக்கிறார்களோ அவர்களே சூழ்ச்சி செய்வார்கள். என்னை கொலை செய்ய வேண்டும் எனப் பயங்கரவாதிகள், போலீசார் கூட திட்டமிட்டனர். இவற்றையெல்லாம் சந்தித்துதான் நான் வந்திருக்கிறேன்.

நான் என்றைக்கும் கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் வாழக்கூடியவன். கட்சி பொறுப்பு எனக்கு ஒரு பொருட்டல்ல. கட்சி பொறுப்பு என் முடிக்கு சமம். என்னை பொறுப்பை விட்டு எடுத்து விட்டால், இவன் அழிந்துவிட்டான், இனிமேல் நாம்தான் என நினைக்கிறார்கள். பயங்கராவதிகள், கட்சிகாரர்கள், காவல்துறையினர் என யாராலும் என்னை அழிக்க முடியாது, அசைத்துப் பார்க்க முடியாது.

என் உயிர் இருக்கும் வரை நான் களத்தில் இருந்து கொண்டே இருப்பேன். யார் சதி செய்தாலும் அச்சப்படுபவன் நான் அல்ல. எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கிறேன். வருட கணக்கா நான் இந்த இயக்கத்துக்காக ஜெயிலில் இருந்திருக்கிறேன். பல முறை எனக்கு கொலை முயற்சி நடந்திருக்கு. காவல்துறையும் முயற்சி செய்துள்ளனர் இதை நான் திரும்பத் திரும்ப சொல்றேன்.

கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

எல்லாத்தையும் தாண்டிதான் இங்கு வந்திருக்கேன். நான் நேற்று கட்சிக்கு வரவில்லை. என் உயிரைப் பணயம் வைத்து கட்சிக்கு வேலை செய்திருக்கேன். என் குடும்பத்தை, பிள்ளைகளை விட்டுட்டு கட்சிக்காகச் சுத்தியிருக்கேன். கட்சி எடுக்கும் நடவடிக்கை கட்டுப்படுறேன். என்னை போலீசார் என்கவுண்டர் செய்ய முடிவெத்தபோது வீட்டில், என் மனைவி, பிள்ளைகளோடு இருந்தேன். போலீஸார், வீட்டில் கதவை உடைத்து என்னை அழைத்துச் சென்றனர். அன்றைக்கும் உங்களுடன் நான் இருக்கேன் என என் மனைவி சொன்னார்.

இன்றைக்கு என் மீது குற்றச்சாட்டு வந்தபோதும் என் மனைவி, பிள்ளைகள் என்னோடு இருக்கின்றனர். அது எனக்கு போதும். என்னை ஏற்றுக்கொண்டவர்கள் எனக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை ஒழிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். அப்படி நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

அடுத்தது நான்தான் என நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஆகி விடுவார்கள். யாருக்கும் எதற்கும் கவலைபடாமல் என்னுடைய இயக்கப் பணியை நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன்" என்றார்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க