செய்திகள் :

ஸ்டாலின், எடப்பாடி முதல் சூர்யா, கார்த்திக் வரை; பிரபலங்கள் குவிந்த திருமண விழா; பின்னணி என்ன?

post image

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், திரை பிரமுகர்கள் என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி- க்கள் என இந்த நிகழ்வில் குவிந்திருக்கிறார்கள். முதல்வர் விஜய் பங்கேற்பதாக தகவல்கள் வெளியான‌ நிலையில், கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.

திரிவேணி குழும திருமண விழா
திரிவேணி குழும திருமண விழா

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த இந்தத் திருமண விழா குறித்து நம்மிடம் பேசிய திரிவேணி குரூப்ஸ் நிர்வாகிகள், "இந்தியாவின் முன்னணி சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு பெருநிறுவனங்களில் ஒன்றாக திரிவேணி குழுமம் இயங்கி வருகிறது.

1991-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய இந்தியாவின் மிக முக்கிய தாது வளம் கொழிக்கும் மாநிலங்களில் உள்ள பெரிய சுரங்கங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது.

இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் தனது சுரங்கத் தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி. பிரபாகரன அவர்களின் மகன் திருமண விழாதான் தற்போது சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல இரும்பு மற்றும் தாது உற்பத்தி நிறுவனமான லாயிட்ஸ் மெட்டல்ஸ் அதிபரின் மகளைச் சம்மந்தம் முடித்திருக்கிறார்கள். இந்திய அளவில் அரசியல் மற்றும் அதிகார‌ மட்டத்தில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சேலம் பிருந்தாவன் மைதானத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தொழிலதிபர்கள் மட்டுமின்றி நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வருகிறார்கள். ஹெலிபேட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

மேட்டூர் அணை: ``முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" - உதயநிதி விமர்சனம்

தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த Dummy ஆட்சியாள... மேலும் பார்க்க

'உட்கார கூட இடமில்ல...' - முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகுமே அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை என மருத்துவமனையில... மேலும் பார்க்க

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” - பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் த... மேலும் பார்க்க

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து ஒரு சில நாடுகள் எப்படியோ தப்பித்துவிட்டாலும், சில நாட... மேலும் பார்க்க

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: `800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு' - தமிழக முதல்வர் ஒப்பந்தம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capabili... மேலும் பார்க்க