செய்திகள் :

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

post image

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்
முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். கண்டனங்கள் வலுத்த நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகம் விவகாரத்தில் முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பதும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் பட்டினம்பாக்கம் தலைமை செயலகத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?

அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?

முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!

புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்
புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.

மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்டாலின், எடப்பாடி முதல் சூர்யா, கார்த்திக் வரை; பிரபலங்கள் குவிந்த திருமண விழா; பின்னணி என்ன?

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சீமான், திருமாவளவன், அண்ணாமலை உள்ளி... மேலும் பார்க்க

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து ஒரு சில நாடுகள் எப்படியோ தப்பித்துவிட்டாலும், சில நாட... மேலும் பார்க்க

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: `800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு' - தமிழக முதல்வர் ஒப்பந்தம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capabili... மேலும் பார்க்க

TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை" - சிபிஎம் சண்முகம் விமர்சனம்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,``புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன்... மேலும் பார்க்க

"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந... மேலும் பார்க்க

`இனி, சங்கு சத்தம் மட்டுமே கேட்கும்; விசில் சத்தம் கேட்காது' - தவெக அரசை விமர்சித்த காளியம்மாள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு பேசிய அ.தி.மு.க-வின் கொள்கை பரப்ப... மேலும் பார்க்க