`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக...
ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?
ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.
ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து ஒரு சில நாடுகள் எப்படியோ தப்பித்துவிட்டாலும், சில நாடுகள் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
பிரான்ஸ் நெருக்கடி
இந்த நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று - பிரான்ஸ்.
செப்டம்பர் 18-ஆம் தேதி, பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் கடுமையான எண்ணெய் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.

பிரான்ஸில் இருக்கும் 11 சதவீத பெட்ரோல், டீசல் ஸ்டேஷன்கள் ஒன்று பெட்ரோல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது டீசல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே மாதிரி, அங்கே பெட்ரோல், டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
மேலும், இந்தப் பிரச்னையை வளரவிடாமல் தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல், டீசல் உற்பத்தியை அதிகரிக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரான்ஸிற்குத்தான் இந்த நிலை என்று இருந்துவிட முடியாது.
இந்தியாவும் சிக்குமா?
இந்தியாவிலும் கச்சா எண்ணெய் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு ‘ஆன் தி வே’-யில் இருக்கிறது என்றே சொல்லலாம்.
ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலை ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துதான் இந்தியா சமன் செய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இருக்கிறது.
அந்த டாப் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.
ஆனால், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இந்தியா ‘இந்திய மக்களின் நலனைத்தான் பார்ப்போம்’ என்று கூறிவிட்டது. இருந்தாலும், அமெரிக்காவின் இந்த அழுத்தத்தை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்கிற கேள்விக்குப் பதில் தெரியவில்லை.

அமெரிக்காவும் விதிவிலகல்ல!
இந்த விஷயத்தில் மற்ற நாடுகளுக்குத்தான் பிரச்னை என்று பார்த்தால், இந்தப் போரைத் தொடங்கிய அமெரிக்காவிற்கே பிரச்னைதான்.
அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை 4 டாலருக்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போ வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள மிட் டேர்ம் தேர்தலுக்காக, “ட்ரம்பின் ஆட்சியை விட, பைடனின் ஆட்சியில்தான் எண்ணெய் விலை அதிகம்” என்று சமாளித்துக்கொண்டிருக்கிறார்.
உலக நாடுகளின் எண்ணெய் பிரச்னை முடிய ஒரே வழி ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி திறப்புதான்’. இதற்கு ஒரே வழி, ‘ஈரான் போர் முடிவதுதான்’.
இதெல்லாம் எப்படி நடக்குமோ... எப்போது நடக்குமோ?














