செய்திகள் :

`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு!

post image

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவர்களை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினர்கள் என பல்வேறு ஊர்களிலிருந்து வந்து இதில் கலந்து கொண்டனர்.

பின்தங்கிய மக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சரியான நிதி உதவி கிடைக்காமல் அல்லல்படுபவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது, என எந்தவொரு லாபநோக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டுகிறது "டாக்டர்நெட்" தன்னார்வ அமைப்பு.

கடந்த 9 ஆண்டுகளாக "நலம் பெறுவோம்" என்ற பெயரின் கீழ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கிறது இந்நிறுவனம். இவர்கள் அமைப்பில் தன்னார்வலர்களாக 600 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், 4300க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்த சந்திப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறுநீரக நிபுணர்களான டாக்டர் ஆனந்தன், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுநீரக நோய்க்கு டயபடீஸ் நோயும் ஒரு காரணி, பாதிப்பு ஏற்பட்டால் தன் உடலை முறையாக கவனித்துக் கொள்ளுதல், முறையாக மருந்துகளை உட்கொள்வது, BP-யை 130க்கு கீழ் குறையாமல் வைத்துக்கொள்வது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, தொடர்ந்து டயாலிசிஸ் செய்வது, கவுன்சிலிங் செல்வது, சுற்றுவட்டாரத்தை சுகாதாரத்துடன் வைத்துக்கொள்வது, இண்ஃப்பெக்ஷன் வராமல் தடுப்பது, குடும்பதினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமேஷனல் சப்போர்ட்டுடன் இருப்பது.

இவற்றையெல்லாம் மிக சிரத்தையோடு செயல்பட்டு கையாள வேண்டும் என, விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாடினார்கள். தற்போதைய சூழலுக்கு டயாலிசிஸ் செய்தாலும், Longterm - க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் சரியானதாக இருக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

மீண்டவர்களின் சொல், விதைக்கும் நம்பிக்கை !

ஒரு தனிநபர்க்கு காய்ச்சல்,சளியை தாண்டி ஏதேனும் ஒரு நோய் வந்து விட்டால் அவர்கள் இனி, நாம் மற்றவர்கள் போல் சாதாரண வாழ்வை வாழ முடியாது என பயப்படுகிறார்கள். தன்னை சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது, நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் சாதாரண வாழ்வை வாழ வேண்டும் என நினைக்காமல் சிலர் முடங்கியும் போகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை, மனஉறுதியோடும், தன்னம்பிக்கையோடும் இருந்தால் நோயிலிருந்து மீண்டு நன்றாக வாழ முடியும் என நம்பிக்கை விதைக்கிறார்கள் "சிறுநீரக நோயில் இருந்து மீண்டவர்கள்."

இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

செய்து கொண்ட ஒருவர் கூறியதாவது;

"சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் பயப்படாமல் இருக்க வேண்டும், தனிமையை தவிர்ப்பது, அவர்கள் நமக்காக இருக்கிறார்கள் நாமும் அவர்களுக்காக இருக்க வேண்டும் என தன் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பது, இப்படியே இருந்து விட்டால் போதும் என்று நினைக்காமல், நோயில் இருந்து மீண்டால் மற்றுமொரு புதிய வாழ்வு நமக்காக காத்திருக்கிறது என நினைக்க வேண்டும். நான் 2005-ல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், அடுத்த 13 வருடத்தில் வாழ்க்கை சிறப்பாக மாறியது. நானும் மற்றவர்கள் போல் சாதாரணமாக வாழ்ந்தேன்.

மீண்டும் 2018-ல் சிறுநீரகம் செயலிழந்தது, ஆனால் நம்பிக்கை செயலிழக்கவில்லை, உடலில் ஏற்பட்ட நோயின் தாக்கம் மற்றும் அதை சமாளிக்க பொருளாதாரம் இல்லாமல் தான் பலர் மனதளவில் உடைந்து போகிறார்கள். அப்படிதான் நானும் இருந்தேன் பின் "டாக்டர்நெட்" அமைப்பின் உதவியோடு 2025-ல் மீண்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்" என வலிமையான நம்பிக்கையோடு பேசினார்.

Doctor Vikatan: சிகிச்சையில் குணமாகாத வாய்ப்புண், காரமாகச் சாப்பிட்டால் எரிச்சல், தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்கு வாய்ப்புண் பாதிப்பு உள்ளது. நாக்கு மற்றும் செவிகளின் உள் பகுதியிலும் புண் உள்ளது. லேசான காரமான உணவுகள் சாப்பிட்டாலும் எரிச்சல் கடுமையாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புண் தெரிவதில... மேலும் பார்க்க

``நிலவேம்பு, பப்பாளி பயன்பாடு: கட்டுக்குள் டெங்கு; பரவும் உண்ணிக் காய்ச்சல்" - அருண்ராஜ் தகவல்!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு, உன்னிக் காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஊரெங்கும் பரவும் டெங்கு காய்ச்சல்... தடுப்பு மருந்தாக பப்பாளிச்சாறு குடிக்கலாமா?

Doctor Vikatan:டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பப்பாளி இலைச்சாறும் நிலவேம்புக் கஷாயமும் கொடுக்கச் சொல்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு எந்த அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கு பலன் அ... மேலும் பார்க்க

டெங்கு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு!; தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: பகல் முழுவதும் உழைப்பு... இரவில் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை... தீர்வென்ன?

Doctor Vikatan:என் அம்மா பகல் முழுவதும் கடினமாக உழைக்கிறார். ஆனாலும் இரவில் மன அழுத்தம் காரணமாக சரியாக உறங்காமல் டி.வி பார்த்துக் கொண்டே விட்டுவிட்டு உறங்குகிறார். மருத்துவரிடம் அழைத்தாலும் வர மறுக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பச்சிளம் குழந்தைக்கு டயாப்பர் அணிவித்துப் பழக்கலாமா?

Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அவள் குழந்தைக்கு டயாப்பர் போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். அது குழந்தைக்கு நல்லதல்ல என்கிறாள்.என் குழந்தைக்கு நான... மேலும் பார்க்க